முகப்பு
தூத்துக்குடி

திருச்செந்தூர் ஸ்ரீ புளியடி சந்தனமாரியம்மன் கோயில் கொடை விழா

திருச்செந்தூர் ஸ்ரீ புளியடி சந்தனமாரியம்மன் கோயில் கொடை விழாவையொட்டி பக்தர்கள் பால்குடம் எடுத்து வழிபட்டனர்.

Updated On : 5 ஏப்ரல் 2018, 8:38 am IST
பகிர்:

திருச்செந்தூர் ஸ்ரீ புளியடி சந்தனமாரியம்மன் கோயில் கொடை விழாவையொட்டி பக்தர்கள் பால்குடம் எடுத்து வழிபட்டனர்.
திருச்செந்தூர் 6ஆவது வார்டு பகுதி புளியடித் தெருவில் உள்ள ஸ்ரீ சந்தனமாரியம்மன் கோயில் கொடை விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 
இதை முன்னிட்டு காலையில் ஸ்ரீசந்தன விநாயகர், ஸ்ரீ சந்தனமாரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம்,  தீபாராதனை ஆகியவை நடைபெற்றன. மாலையில் பக்தர்கள் பால்குடம் எடுத்து வழிபட்டனர். இரவில் சிறப்பு அபிஷேகம்,  அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து அம்மன் புஷ்ப அலங்காரத்தில் சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. புதன்கிழமை மஞ்சள் நீராட்டு நடைபெற்றது. ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments