கல்வியில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு
சாத்தான்குளம் ஹென்றி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 2017-2018 ஆம் கல்வியாண்டில் கல்வியில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.
சாத்தான்குளம் ஹென்றி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 2017-2018 ஆம் கல்வியாண்டில் கல்வியில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.
விழாவுக்கு, பால் ஏசுதாஸ் தலைமை வகித்தார். ஓய்வுபெற்ற நல்லாசிரியர் கீதாராஜ் முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் நோபுள்ராஜ் வரவேற்றார். தலைமை ஆசிரியர் பங்கராஜ் வாழ்த்திப் பேசினார். இதில் படிப்பில் வகுப்பில் முதல் இரு இடங்களைப் பெற்ற மாணவர், மாணவிகளுக்கும், 100 விழுக்காடு வருகைபுரிந்த மாணவர், மாணவிகளுக்கும் பரிசு, சான்றிதழ், பதக்கம் அளிக்கப்பட்டது. தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. துணை முதல்வர் சந்தனகுமார் நன்றி கூறினார்.
ஏற்பாடுகளை பள்ளி நிர்வாக அலுவலர் சாந்தி, ஆசிரியர்கள் சாந்தி, ஜெயராணி, லிலிங்கத்துரை மற்றும் அலுவலகப் பணியாளர்கள் செய்திருந்தனர்.