இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் கூட்டம்
திருச்செந்தூர் ஒன்றிய இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் கூட்டம் ஆறுமுகனேரியில் நடைபெற்றது.
திருச்செந்தூர் ஒன்றிய இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் கூட்டம் ஆறுமுகனேரியில் நடைபெற்றது.
ஆறுமுகனேரி நகரச் செயலர் பேச்சிமுத்து தலைமை வகித்தார். தெற்கு மாவட்டச் செயலர் சக்திவேல், மாவட்ட அமைப்பாளர் தனலிலிங்கம், திருச்செந்தூர் ஒன்றியத் தலைவர் இசக்கிமுத்து, உடன்குடி ஒன்றியத் தலைவர் குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொதுச் செயலாளர் ரவிகிருஷ்ணன் சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில் ஆங்கிலப் புத்தாண்டு தினமான ஜனவரி 1ஆம் தேதி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலிலில் நள்ளிரவு 12 மணிக்கு நடைதிறப்பதை தடை செய்ய வேண்டும்; பாதயாத்திரையாக வரும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும்; ஆறுமுகனேரி முத்துகிருஷ்ணாபுரம் 6ஆவது வார்டில் எரியாத தெருவிளக்குகளை மாற்ற வேண்டும்; ராஜமன்னியபுரம் பெருமாள் சுவாமி கோயில் அருகில் கட்டப்பட்டுள்ள குடிநீர்த் தொட்டியை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலதிருச்செந்தூர் தர்மலிலிங்கம், காயாமொழி செல்வகுமார், திருச்செந்தூர் ஒன்றிய இளைஞர் அணி தலைவர் பாலமுருகன், ஆறுமுகனேரி நகரத் தலைவர் சிவநேசன், காயாமொழி ஊராட்சி அமைப்பாளர் சக்திகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.