எம்ஜிஆர் நினைவு நாள்: தூத்துக்குடியில் அதிமுகவினர் மெளன ஊர்வலம்
முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் நினைவு நாளை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்ட அதிமுக சார்பில் திங்கள்கிழமை
முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் நினைவு நாளை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்ட அதிமுக சார்பில் திங்கள்கிழமை மெளன ஊர்வலம் மற்றும் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
குரூஸ் பர்னாந்து சிலை முன்பிருந்து, அதிமுக மாவட்டச் செயலர் சி.த. செல்லப்பாண்டியன் தலைமையில் மெளன ஊர்வலம் புறப்பட்டது. தொடர்ந்து, பழைய மாநகராட்சி வளாகத்தில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
தூத்துக்குடி டூவிபுரத்தில் அதிமுக அமைப்புச் செயலரும், ஸ்ரீவைகுண்டம் சட்டப்பேரவை உறுப்பினருமான எஸ்.பி. சண்முகநாதன் அலுவலகம் முன்பு அலங்கரித்து வைக்கப்பட்ட எம்ஜிஆர் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
மக்களவை உறுப்பினர் ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அதிமுக நிர்வாகிகள் எஸ்.டி, கருணாநிதி, ஏசாதுரை, சத்யா லட்சுமணன், தனராஜ், சகாயராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கோவில்பட்டி: கோவில்பட்டி சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகம், ஏ.கே.எஸ். தியேட்டர் சாலையில் உள்ள நகர அதிமுக அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டிருந்த பந்தலில் எம்.ஜி.ஆர். உருவப்படத்திற்கு அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
ஸ்ரீவைகுண்டம்: ஸ்ரீவைகுண்டத்தில் நகர அதிமுக சார்பில் ஒன்றியச் செயலர் ஆறுமுகநயினார் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது.
உடன்குடி: உடன்குடி ஒன்றியத்தின் பல்வேறு பகுதிகளில் ஒன்றியச் செயலர் த.மகராஜா தலைமையில் எம்ஜிஆர் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது..
அமமுக சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஒன்றியச் செயலர் அம்மன் நாராயணன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.