தூத்துக்குடி

தகராறு: 3 பெண்கள் உள்பட 4 பேர் கைது

DIN

கோவில்பட்டி அருகே பொதுக்குழாயில் தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் தொடர்புடையதாகக் கூறப்படும் 3 பெண்கள் உள்பட 4 பேரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
சங்கரன்கோவில் வட்டம், செவல்குளத்தைச் சேர்ந்தவர் உதயகுமார் மனைவி சரண்யா(24). இவர் ஞாயிற்றுக்கிழமை முடுக்குமீண்டான்பட்டியில் உள்ள பெற்றோர் பழனி-சேதுராணி வீட்டருகே உள்ள பொதுக்குழாயில் தண்ணீர் பிடிப்பதற்காகச் சென்றாராம்.
அப்போது அதே பகுதியைச் சேர்ந்த ரவி மனைவி ஜெயசீலிக்கும்(40), சரண்யாவுக்கும் இடையே தண்ணீர் பிடிப்பதில் தகராறு ஏற்பட்டதாம். இதையடுத்து, வீட்டிற்கு சென்ற சரண்யா அவரது உறவினர்கள் திலீப்குமார் மற்றும் அவரது நண்பர் சரண்ராஜ், சரண்யா, ஜெயலட்சுமி, சேதுராணி ஆகியோர் ஜெயசீலி வீட்டிற்கு சென்று தகராறு குறித்து பேசினராம்.
இந்நிலையில், வீட்டில் இருந்த ஜெயசீலியின் கணவர் ரவி மற்றும் அவரது உறவினர்கள் கு.பிரியதரன்(70), ஜெயசீலி, மகாலட்சுமி, உடையம்மாள், லட்சுமி ஆகியோரும் வீட்டைவிட்டு வெளியே வந்து இருதரப்பினரிடையே தகராறு ஏற்பட்டதாம். அப்போது ரவி ஆயுதங்களால் தாக்கினாராம். இதில் ரவி மற்றும் திலீப்குமார் ஆகிய இருவருக்கும் காயம் ஏற்பட்டதாம்.
காயமடைந்த இருவரும் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து ரவி நாலாட்டின்புத்தூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், சங்கரகோமதி மனைவி ஜெயலட்சுமி(38) கைது செய்யப்பட்டார். மேலும், இவ்வழக்கில் தொடர்புடைய சரண்ராஜ், சரண்யா, சேதுராணி ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.
இதுபோல, திலீப்குமார் நாலாட்டின்புத்தூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், ரவி, பிரியதரன், ஜெயசீலி, மகாலட்சுமி, உடையம்மாள், லட்சுமி ஆகியோர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இதில் கு.பிரியதரன்(70), ர.ஜெயசீலி(40), பி.உடையம்மாள்(68) ஆகிய மூவரையும் போலீஸார் கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

‘பாதுகாப்புத்துறை பணியிடங்களில் சேரும் தகுதியை மாணவா்கள் வளா்த்துக் கொள்ள வேண்டும்’

துறைமுகத்திலிருந்து நிலக்கரி ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கு கட்டுப்பாடு

திருநள்ளாற்றில் மாரியம்மன் வீதியுலா

SCROLL FOR NEXT