ஊருணியில் முகாமிடும் பறவைகள்: மக்களுக்கு விளக்கும் பசுமை இயக்கம்
மூப்பன்பட்டி ஊருணியில் முகாமிடும் பறவைகள் குறித்து பொதுமக்கள், கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு விளக்கும் நிகழ்ச்சியை கோவில்பட்டி பசுமை இயக்கம் ஞாயிற்றுக்கிழமை நடத்தியது.
மூப்பன்பட்டி ஊருணியில் முகாமிடும் பறவைகள் குறித்து பொதுமக்கள், கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு விளக்கும் நிகழ்ச்சியை கோவில்பட்டி பசுமை இயக்கம் ஞாயிற்றுக்கிழமை நடத்தியது.
நிகழ்ச்சிக்கு கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரி தாவரவியல் துறை உதவிப் பேராசிரியர் மகேஷ்குமார் தலைமை வகித்தார். வெங்கடேஸ்வரா மருத்துவமனை மருத்துவர் தாமோதரன் முன்னிலை வகித்தார்.
மணிமுத்தாறு அகத்தியர் மலை மக்கள்சார் இயற்கைவாழ் பாதுகாப்பு மைய ஒருங்கிணைப்பாளர் மதிவாணன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, ஊருணியில் முகாமிடும் பறவைகள், மூப்பன்பட்டி ஊருணியில் முகாமிட்டுள்ள பறவைகள் குறித்து பசுமை இயக்க மாணவர், மாணவிகளுக்கு தொலைநோக்கி மூலம் காட்டி, ஊருணியில் முகாமிட்டுள்ள நீர்க்கோழி, நாமக்கோழி, புள்ளிதாரான், அறிவாள் மூக்கன் உள்ளிட்ட 9 வகை பறவைகளின் இயல்புகளை விளக்கினார். மேலும், பறவைகளின் வகைப்பாடு மற்றும் அதன் உடலமைப்பு குறித்து காட்சிப்படங்களுடன் அவர் விவரித்தார்.
நிகழ்ச்சியில், பசுமை இயக்க உறுப்பினர்கள், மூப்பன்பட்டி ஊர் பொதுமக்கள், கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரி மாணவர், மாணவிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை பசுமை இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜெகஜோதி, இயற்கை ஆர்வலர் ஜான்ஜோசப் ஆகியோர் செய்திருந்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.