தூத்துக்குடி

விளாத்திகுளத்தில் சட்ட விழிப்புணர்வு முகாம்

DIN

வேம்பு மக்கள் சக்தி இயக்கம் சார்பில் இலவச சட்ட விழிப்புணர்வு முகாம் விளாத்திகுளத்தில் நடைபெற்றது.
முகாமுக்கு வேம்பு மக்கள் சக்தி இயக்க இயக்குநர் ஆரோக்கியம் தலைமை வகித்தார்.  உதவி இயக்குநர் ஆரோக்கிய மான்சிங் முன்னிலை வகித்தார்.  முகாமில் தூத்துக்குடி மாவட்ட இலவச சட்டப் பணிகள் ஆணைக்குழு நீதிபதி பெஞ்சமின் சாமுவேல் பங்கேற்று இலவச சட்ட உதவிகள் மற்றும் சட்ட ஆலோசனைகள் குறித்து பேசினார். இலவச சட்ட உதவிகள் பெறும் முறைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் குறித்த கையேடு வழங்கப்பட்டது.  இதில்,  விளாத்திகுளம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள், வேம்பு தொண்டு நிறுவன உறுப்பினர்கள்,  மகளிர் குழுக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். வட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு உறுப்பினர் ஐயப்பன் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே தினத்தையொட்டி சாலை விழிப்புணா்வு ஊா்வலம்

அதியமான் கோட்டையில் தேய்பிறை அஷ்டமி பெருவிழா

குருப் பெயா்ச்சி: கோயில்களில் பக்தா்கள் வழிபாடு

‘நான் முதல்வன்’ திட்டத்தில் மாநில அளவில் நாமக்கல் முதலிடம்: ஆட்சியா் பாராட்டு

பொத்தனூா் மாரியம்மன் கோயில் தோ்த் திருவிழா தொடக்கம்

SCROLL FOR NEXT