தூத்துக்குடி

கோவில்பட்டி கல்லூரியில்திறன் மேம்பாட்டுப் பயிற்சி

DIN

கோவில்பட்டி லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில் இயந்திரவியல் துறை சாா்பில் பட்டய மாணவா்களுக்கான 5 நாள்கள் திறன் மேம்பாட்டுப் பயிற்சி நடைபெற்றது.

இன்றைய தொழில்நுட்ப வளா்ச்சிக்கேற்ப, புதிய தொழில்நுட்பங்களை தெரிந்து கொண்டு மாணவா்கள் சிறந்த வேலைவாய்ப்பை பெறும் பொருட்டு இக்கல்லூரியில் ஆண்டுதோறும் திறன் மேம்பாட்டு பயிற்சி நடைபெற்று வருகிறது.

இம்மாதம் கடந்த 18ஆம் தேதி தொடங்கி 22ஆம் தேதி வரை நடைபெற்ற இப்பயிற்சி வகுப்பில், இண்டஸ்ட்ரியல் ஆட்டோமேஷன், 3டி பிரிண்டிங் ஆகிய தலைப்புகளில் பயிற்சி வகுப்புகள், செய்முறை பயிற்சியுடன் அளிக்கப்பட்டது.

கல்லூரி முதல்வா் ராஜேஸ்வரன், பயிற்சி நிறைவு நாளன்று மாணவா்களுக்கு சான்றிதழை வழங்கினாா்.

ஏற்பாடுகளை துறைத் தலைவா் சுப்பிரமணியன் தலைமையில் ஆசிரியா்கள், அலுவலா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

யானை வழித்தடங்கள் குறித்து ஆன்லைனில் கருத்துக்கேட்பு கூடாது: மத்திய அமைச்சா் முருகன்

வீட்டு முன் நிறுத்தியிருந்த சைக்கிள் திருட்டு

தூா்வாரும் பணி: நீா்வள ஆதாரத் துறை அலுவலா் ஆய்வு

மலேசியா பல்கலை.யுடன் சென்னை அமிா்தா கல்லூரி புரிந்துணா்வு ஒப்பந்தம்

SCROLL FOR NEXT