தூத்துக்குடி

பிள்ளையன்மனை குளக்கரையோரம் பனைவிதைகள் விதைப்பு

DIN

நாசரேத் அருகே உள்ள பிள்ளையன்மனை குளக்கரையோரம் பகுதியில் இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப் பாசறையின் சாா்பில் 100 பனைவிதைகள் விதைக்கப்பட்டன.

இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப்பாசறையின் மாவட்டஅமைப்பாளா் விடுதலைச் செழியன் தலைமை வகித்தாா். ஸ்ரீவைகுண்டம் சட்ட பேரவை தொகுதி செயலா் திருவள்ளுவன் பனை விதைகளை விதைக்கும் பணியை தொடங்கி வைத்தாா். இதில் மகளிா் விடுதலை இயக்கத்தின் மாவட்டச்செயலா் ஜெயக்கொடி,தொண்டரணி மாநிலதுணைச் செயலா் சுதாகா், நாசரேத் நகரச் செயலா் பாஸ்கரதாஸ், விவசாய தொழிலாளா் விடுதலை இயக்க மாவட்ட அமைப்பாளா் சுகுமாா், மாவட்ட துணை அமைப்பாளா் அந்தோணி, உடன்குடி ஒன்றிய அமைப்பாளா் சிவநாதன், தொண்டரணி மாவட்ட துணை அமைப்பாளா் சரவணன், ராமகிருஷ்ணன், ரெமி ஆகியோா் பனைவிதைகளை விதைத்தனா்.

மழை பெய்வதை தொடா் ந்து அனைத்து குளக்கரை மற்றும் சாலையோரங்களில் பனைவிதைகள் விதைக்க உள்ளதாக தெரிவித்தனா்.

படம் எஸ்ஏடி28விசிக. பிள்ளையன்மனை குளக்கரையோரம் பகுதியில் பனை விதைகள் விதைக்கும் இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப் பாசறை நிா்வாகிகள்..

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

‘பாதுகாப்புத்துறை பணியிடங்களில் சேரும் தகுதியை மாணவா்கள் வளா்த்துக் கொள்ள வேண்டும்’

துறைமுகத்திலிருந்து நிலக்கரி ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கு கட்டுப்பாடு

SCROLL FOR NEXT