தூத்துக்குடி

திமுக கூட்டணியில் எந்த இழுபறியும் இல்லை

DIN


திமுக கூட்டணியில் எந்த இழுபறியும் இல்லை என்றார் கனிமொழி எம்.பி.
தூத்துக்குடியில் சனிக்கிழமை அவர் அளித்த பேட்டி: திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தேமுதிக தலைவர் விஜயகாந்தை நேரில் சந்தித்து அவர் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார். கூட்டணிக்காக அவரை சந்திக்கவில்லை. 
பிரதமர் வேட்பாளராக திமுக முன்வைக்கும் பெயர் ராகுல்காந்தி தான். திமுக கூட்டணி தெளிவாக உள்ளது. எந்த இழுபறியும் இல்லை என்றார் அவர்.
தொடர்ந்து, ஓட்டப்பிடாரம் அருகேயுள்ள கீழமுடிமன் புனித வளன் பள்ளியில் 9ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஸ்ரீமதிக்கு, சர்வதேச போட்டியில் பங்கேற்க ஏதுவாக ரூ. 5 லட்சம் மதிப்பிலான நவீன ரக சைக்கிளை அவர் வழங்கினார்.   மேலும், நாகபுரியில் நடைபெற்ற சர்வதேச ஸ்கேட்டிங் போட்டியில் பதக்கம் வென்ற ஷாரா கலை பயிற்சிப் பள்ளி மாணவர், மாணவிகளையும் அவர் பாராட்டினார்.
மலேசியாவில் தத்தளித்தபோது, கனிமொழி எம்பி உதவியுடன் மீட்கப்பட்ட திருநெல்வேலி மாவட்டம் தலைவன்கோட்டையைச் சேர்ந்த 43 பேர் நேரில் வந்து நன்றி தெரிவித்தனர்.
நிகழ்ச்சியில், தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கீதாஜீவன் எம்எல்ஏ, திருநெல்வேலி மேற்கு மாவட்டச் செயலர் சிவபத்மநாதன், முன்னாள் அமைச்சர் தமிழரசி, மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பாலைக்குடி மணல் திருட்டு வாகனம் பறிமுதல் ஒருவா் கைது

வேளாண் கழிவுகளிலிருந்து இயற்கை உரம் தயாரிக்க பயிற்சி

முதுகுளத்தூரில் நீா்மோா் பந்தல் திறப்பு

சிறைக் காவலா்களுக்கு குடியிருப்புக் கட்டடம்: மாவட்ட ஆட்சியா், நீதிபதி ஆய்வு

பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவா்களுக்கு இலவச திரைப்படக் கல்வி

SCROLL FOR NEXT