தூத்துக்குடி

தையல் பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் அளிப்பு

DIN

தூத்துக்குடியில் இலவச தையல் பயற்சி பெற்ற பெண்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பாரத ஸ்டேட் வங்கியின் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையம், மதர் சமூக சேவை நிறுவனம் சார்பில் கிராமப்புற ஏழை பெண்களுக்கு இலவசமாக நவீன ஆடை வடிவமைப்பு (தையல்) பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சி நிறைவடைந்ததை அடுத்து,  நடைபெற்ற விழாவுக்கு, பயிற்சி மையத்தின் இயக்குநர் மு. துரைசாமி தலைமை வகித்தார். மதர் சமூகசேவை நிறுவன இயக்குநர் எஸ்.ஜே. கென்னடி முன்னிலை வகித்தார். மத்திய அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை மேம்பாட்டு அமைச்சக கூடுதல் ஆணையர் ஜி. சண்முகநாதன் பங்கேற்று, பயிற்சி பெற்ற பெண்களுக்கு சான்றிதழ் வழங்கினார்.
இதில்,  மைய ஒருங்கிணைப்பாளர் அசோக்குமார், அலுவலக பணியாளர் ஜான்சி, பனைத் தொழிலாளர் சங்கச் செயலர் ராயப்பன், சமூக சேவை நிறுவன ஒருங்கிணைப்பாளர் பானுமதி, தையல் ஆசிரியை அந்தோணியம்மாள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அன்பே அன்னா..!

25,000 ஆசிரியா் நியமனங்கள் ரத்து வழக்கு: நிர்வாக முறைகேடு நடந்துள்ளது -உச்சநீதிமன்றம்

அரவிந்த் கேஜரிவால் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு

சேலை கட்டி வந்த நிலவோ? காவ்யா...

வெயில், மழை வானிலை சொல்லும் முழுவிபரம்!

SCROLL FOR NEXT