மின் சிக்கன விழிப்புணர்வு முகாம்
தூத்துக்குடி அன்னம்மாள் மகளிர் கல்வியியல் கல்லூரியின் "அறிவியல் கழகம்', தூத்துக்குடி தெர்மல் அனல் மின்
தூத்துக்குடி அன்னம்மாள் மகளிர் கல்வியியல் கல்லூரியின் "அறிவியல் கழகம்', தூத்துக்குடி தெர்மல் அனல் மின் நிலையம் ஆகியவை சார்பில், "மின் ஆற்றல் பாதுகாப்பு" என்ற தலைப்பில் மாணவிகளுக்கான மின்சார சிக்கனம் குறித்த ஒரு நாள் விழிப்புணர்வு முகாம் கல்லூரி முதல்வர் அ. ஜாய்சிலிந் சர்மிளா தலைமயில் அண்மையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில், தூத்துக்குடி தெர்மல் அனல் மின்நிலைய செயற்பொறியாளர்கள் சி. ஏகாந்தலிங்கம், அலமார் செல்வன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டு பேசினர்.
மேலும், உதவி செயற் பொறியாளர்கள் நாகராஜன் மற்றும் சத்ய நாராயணகுமார் ஆகியோர் மின்சாரத்தின் பாதுகாப்பு மற்றும் வீடுகளில் மின் சிக்கனத்தை எவ்வாறு கடைப்பிடிப்பது என்பது குறித்தும், ஒலி ஒளி காட்சியோடு விளக்கினர்.
நிகழ்ச்சியில், கல்லூரிச் செயலர் முரளிதரன், அறிவியல் கழக ஒருங்கிணைப்பாளர் பேராசிரியை சாருலதா, அறிவியல் கழகத் தலைவி டி. பிரேமா மற்றும் மாணவிகள் கலந்துகொண்டனர்.