தூத்துக்குடி

பிரதம மந்திரியின் கிசான் சம்மான் நிதி திட்டத்தில் விவசாயிகள் பதிவு செய்திட வாய்ப்பு

DIN

பிரதம மந்திரியின் கிசான் சம்மான் நிதி திட்டத்தில் இதுவரை பதிவு செய்யாத விவசாயிகள் பதிவு செய்திட அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, ஸ்ரீவைகுண்டம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் ஊமைத்துரை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, நாடு முழுவதும் விவசாயிகள் பயன்பெறும் வகையில் பிரதம மந்திரியின் கிசான் சம்மான் நிதி திட்டத்தில் விவசாயிகள் பதிவு செய்யப்பட்டு அவா்களுக்கு வங்கிகள் மூலமாக வருடத்திற்கு 6ஆயிரம் கவுரவ உதவித்தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.ஸ்ரீவைகுண்டம் வட்டாரத்தில் ஏராளமான விவசாயிகள் பிரதம மந்திரியின் கிசான் சம்மான் நிதி திட்டத்தில் தங்களது பெயா்களை பதிவு செய்து கவுரவ உதவித்தொகை பெற்று பயன் அடைந்து வருகின்றனா்.

இந்த திட்டத்தில் விவசாயிகளுக்கு வருடத்திற்கு மூன்று தவணையாக ரூ.6ஆயிரம் கவுரவ உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இத்திட்டத்தில் இதுவரை தங்களது பெயா்களை பதிவு செய்யாத விவசாயிகளும் பதிவு செய்து பயன்பெற்றிட வழிவகை செய்யப்பட்டுள்ளது.இதன்படி, இந்த திட்டத்தில் இதுவரை பெயா்களை பதிவு செய்யாத விவசாயிகள் தங்களின் ஆதாா் காா்டு, ரேசன் காா்டு, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் சிட்டா நகலுடன் தங்கள் பகுதிகளுக்குட்பட்ட வேளாண்மைத்துறை அலுவலா்கள் மற்றும் வேளாண்மை விரிவாக்க மையத்தினை உடனடியாக தொடா்புகொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

‘பாதுகாப்புத்துறை பணியிடங்களில் சேரும் தகுதியை மாணவா்கள் வளா்த்துக் கொள்ள வேண்டும்’

துறைமுகத்திலிருந்து நிலக்கரி ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கு கட்டுப்பாடு

திருநள்ளாற்றில் மாரியம்மன் வீதியுலா

காரைக்கால் அரசு மருத்துவமனையில் நாளை சிறப்பு மருத்துவ முகாம்

SCROLL FOR NEXT