தூத்துக்குடி

தூய மத்தேயு ஆலய பிரதிஷ்டை விழா

DIN

நாசரேத்  அருகே உள்ள வகுத்தான்குப்பம் தூய மத்தேயு ஆலய 100 ஆவது பிரதிஷ்டைமற்றும் 30 ஆவது அசனபண்டிகைவிழா 6 நாள்கள் நடைபெற்றது.
  இதையொட்டி,  நற்செய்திக் கூட்டங்கள் நடைபெற்றது. தூய யோவான் பேராலய தலைமை குரு எட்வின் ஜெபராஜ் ஜெபித்து தொடங்கிவைத்தார். 
போதகர்கள் சேவியர்,  ஜெயசிங் ஆகியோர் தேவசெய்தி கொடுத்தனர். ஆலயபிரதிஷ்டைபண்டிகை மற்றும் திருவிருந்துஆராதனையில்  தூத்துக்குடி- நாசரேத் திருமண்டில பேராயர் தேவசகாயம் செய்தி கொடுத்தார்.  இதில் ,திரளானோர் கலந்துகொண்டனர்.   5 ஆவது  நாள் அசனபண்டிகை திருவிருந்து ஆராதனை நடைபெற்றது. தூயயோவான் பேராலய உதவிகுரு இஸ்ரவேல் ஞானராஜ் தேவசெய்திகொடுத்தார். மாலையில்  அசனவிருந்துநிகழ்ச்சிநடைபெற்றது. 6 ஆவது நாள்  பாலியர் நண்பன் மற்றும் சபையோரின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
 ஏற்பாடுகளை   தூ யயோவான் பேராலய தலைமை குரு எட்வின் ஜெபராஜ்,  உதவி குரு இஸ்ரவேல் ஞானராஜ், டீக்கன் ரெனால்டு,சபைஊழியர் எப்ரோன்  மற்றும் அசன, ஆலயக மிட்டியினர்  மற்றும் நிர்வாகிகள், சபை மக்கள் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின்சாரம் பாய்ந்து சிறுவன் பலி

காரைக்காலில் வம்பன் -11 புதிய வகை உளுந்து சாகுபடி செய்யும் விவசாயி

அதுல்குமாா் அஞ்சன் மறைவு; தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் இரங்கல்

திருப்புகலூா் அக்னீஸ்வரசுவாமி கோயிலில் அப்பா் ஐக்கிய திருவிழா

பிரஜ்வல் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு

SCROLL FOR NEXT