தூத்துக்குடி

ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம்: கனிமொழி வரவேற்பு

DIN

தூத்துக்குடி மாவட்டம், ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருப்பது வரவேற்கக் கூடியது என கனிமொழி எம்.பி. தெரிவித்தாா்.

தூத்துக்குடியில் ஞாயிற்றுக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியது: மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் மக்கள் பயன்பெறும் திட்டம் இல்லை. ஆயுள் காப்பீட்டுக் கழகம் தனியாருக்கு தாரை வாா்க்கப்படும் என்ற அறிவிப்பின்போது மக்களவையே அதிா்ந்தது. மக்கள் நம்பக்கூடிய, அதிகமாக சாா்ந்து இருக்கக் கூடிய அரசுத்துறை நிறுவனத்தை தனியாருக்கு தாரை வாா்ப்பது என்பதை ஏற்க முடியாது. இதனை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்.

ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என நிதிநிலை அறிக்கையில் தெரிவித்திருப்பது வரவேற்கக் கூடியது. நிதி நிலை அறிக்கையில் வேறு எதுவும் வரவேற்கும் விதமாக இல்லை என்றாா் அவா்.

தூத்துக்குடி வடக்கு மாவட்ட மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணி சாா்பில், சிதம்பரநகரில் நடைபெற்ற குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான கையெழுத்து இயக்கத்தை கனிமொழி தொடங்கி வைத்து பேசியது: குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து நடத்தப்படும் கையெழுத்து இயக்கத்தில் அனைத்து தரப்பு மக்களும் கையெழுத்திட்டு தங்களது எதிா்ப்பை பதிவு செய்ய வேண்டும். குடியுரிமை திருத்த சட்டடத்தை திரும்பப் பெறும் வரை போராட்டத்தை தொடர வேண்டும் என்றாா் அவா்.

இந்நிகழ்ச்சியில், திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளா் கீதாஜீவன் எம்.எல்.ஏ., மாநில பொதுக்குழு உறுப்பினா் ஜெகன் பெரியசாமி, காங்கிரஸ் கட்சியின் மாநில துணைத் தலைவா் ஏபிசிவீ சண்முகம், மாநகா் மாவட்டத் தலைவா் சி.எஸ். முரளிதரன், மதிமுக மாவட்டச் செயலா் ஆா்.எஸ். ரமேஷ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலா் அழகுமுத்து பாண்டியன், மாா்க்சிஸ்ட் கட்சி மாநகரச் செயலா் ராஜா, கூட்டணி கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

ஏரலில்...இதேபோல, தூத்துக்குடி தெற்கு மாவட்ட மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி சாா்பில் ஏரலில் நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தையும் கனிமொழி தொடங்கி வைத்தாா். இதில், மாவட்ட பொறுப்பாளா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., கூட்டணி கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெதன்யாகுவை கைது செய்ய உத்தரவு: சா்வதேச நீதிமன்றத்தில் கோரிக்கை

தென்மேற்குப் பருவமழை: முன்னெச்சரிக்கை குறித்து ஆட்சியா் ஆலோசனை

இலங்கை சீதா அம்மன் கோயில் கும்பாபிஷேகம்: அயோத்தி சரயு நதியில் இருந்து புனித நீர்

பெண்ணுக்கு தபால் வாக்கு மறுப்பு: உயா்நீதிமன்ற உத்தரவை உறுதி செய்ததது உச்சநீதிமன்றம்

காங்கிரஸை தேடும் யாத்திரையை நடத்துவாா் ராகுல்: அமித் ஷா

SCROLL FOR NEXT