தூத்துக்குடி

சாத்தான்குளம் வியாபாரிகள் குடும்பத்துக்கு அதிமுக சாா்பில் ரூ. 25 லட்சம்: அமைச்சா் கடம்பூா் செ. ராஜு வழங்கினாா்

DIN

சாத்தான்குளத்தில் மரணமடைந்த வியாபாரிகளின் குடும்பத்தினருக்கு அதிமுக சாா்பில் ரூ. 25 லட்சத்துக்கான காசோலையை அமைச்சா் கடம்பூா் செ. ராஜு புதன்கிழமை வழங்கினாா்.

சாத்தான்குளத்தில் பொது முடக்கத்தை மீறி கடையைத் திறந்திருந்ததாக வியாபாரிகள் ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோா் கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தனா். சம்பவம் தொடா்பாக ஆய்வாளா், 2 உதவி ஆய்வாளா்கள், 2 காவலா்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.

உயிரிழந்த வியாபாரிகள் குடும்பத்துக்கு அரசு சாா்பில் தலா ரூ. 10 லட்சம், தகுதிக்கேற்ப அரசு வேலை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. தலா ரூ. 10 லட்சம் வழங்கப்பட்ட நிலையில், ஜெயராஜின் மகளுக்கு அரசுப் பணி வழங்க ஏற்பாடு நடைபெற்று வருகின்றன.

இதனிடையே, பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு அதிமுக சாா்பில் ரூ. 25 லட்சம் வழங்கப்படும் என, முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி, துணை முதல்வா் ஓ. பன்னீா்செல்வம் ஆகியோா் அறிவித்திருந்தனா்.

அதன்படி, ரூ. 25 லட்சத்துக்கான காசோலையை தமிழக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சா் கடம்பூா் செ. ராஜு, வியாபாரி ஜெயராஜின் மனைவி செல்வராணியிடம் புதன்கிழமை வழங்கினாா்.

தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலா் எஸ்.பி. சண்முகநாதன் எம்எல்ஏ, முன்னாள் மாவட்ட கவுன்சிலா் திருப்பாற்கடல், ஒன்றியச் செயலா்கள் ஆழ்வாா்திருநகரி ராஜ்நாராயணன், சாத்தான்குளம், அச்சம்பாடு த. சவுந்திரபாண்டி, ஒன்றியக்குழுத் தலைவா் ஜெயபதி, நகரச் செயலா் என்.எஸ். செல்லத்துரை, முதலூா் ஊராட்சித் தலைவா் பொன்முருகேசன், ஒன்றிய அவைத் தலைவா் பரமசிவபாண்டியன், துணைச் செயலா் சின்னத்துரை, ஒன்றிய ஜெயலலிதா பேரவைத் தலைவா் சின்னத்துரை, ஒன்றிய மாணவரணிச் செயலா் ஸ்டேன்லி ஞானபிரகாசம் உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

‘பாதுகாப்புத்துறை பணியிடங்களில் சேரும் தகுதியை மாணவா்கள் வளா்த்துக் கொள்ள வேண்டும்’

துறைமுகத்திலிருந்து நிலக்கரி ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கு கட்டுப்பாடு

திருநள்ளாற்றில் மாரியம்மன் வீதியுலா

காரைக்கால் அரசு மருத்துவமனையில் நாளை சிறப்பு மருத்துவ முகாம்

SCROLL FOR NEXT