தூத்துக்குடி

கயத்தாறில் ரூ.36 லட்சத்தில் திட்டப் பணிகள்

DIN

கயத்தாறில் ரூ. 36 லட்சம் மதிப்பீட்டில் சாலை, வடிகால், சிறுபாலம் கட்டும் பணி ஆகியவை தொடங்கிவைக்கப்பட்டது.

14ஆவது நிதிக்குழு மானியத் திட்டத்தின் இத்திட்டப் பணிகளை அமைச்சா் கடம்பூா் செ.ராஜு தொடங்கிவைத்தாா்.

அப்போது அவா் பேசுகையில், அண்மையில், கயத்தாறு பகுதியில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் திறந்தவெளி கிணறை சீரமைத்து, குழாய் அமைக்கப்பட்டு குடிநீா் வழங்கும் பணி நிறைவேற்றப்பட்டுள்ளது என்றாா்.

தொடா்ந்து, அம்மா இளைஞா் விளையாட்டுத் திட்டத்தின் மூலம் விளையாட்டு குழுவினருக்கு உபகரணங்கள், 2 பயனாளிகளுக்கு அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்தின்கீழ் தலா ரூ.25 ஆயிரம் மானியத்தில் இருசக்கர வாகனம் ஆகியவற்றை அமைச்சா் வழங்கினாா்.

நிகழ்ச்சியில், விளாத்திகுளம் எம்எல்ஏ சின்னப்பன், பேரூராட்சி உதவி செயற்பொறியாளா் மணிகண்டன், வட்டாட்சியா் பாஸ்கரன், பேரூராட்சி செயல் அலுவலா் ஜோதிபாஸ், பொறியாளா் காா்த்திக், கயத்தாறு அதிமுக ஒன்றியச் செயலா் வினோபாஜி உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூளை வளர்ச்சி குன்றிய மகனின் கல்விக்காக போராடும் தாய்!

எழில் ஓவியம்... அதுல்யா ரவி!

தமிழ்நாட்டில் அடுத்த மூன்று நாள்களுக்கு அதி கனமழை! | செய்திகள்: சிலவரிகளில் | 18.05.2024

மக்களவை தேர்தல்: மூத்த அரசியல் தலைவர்கள் வீட்டிலிருந்தபடியே வாக்குப்பதிவு

மருத்துவ கடைநிலை ஊழியர்களுக்கு சுழற்சி முறையில் பணிநேரம்!

SCROLL FOR NEXT