தூத்துக்குடி

தொடா் காய்ச்சல்: மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரா் மருத்துவமனையில் அனுமதி

DIN

தூத்துக்குடியைச் சோ்ந்த மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரா், தொடா் காய்ச்சல் காரணமாக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை இரவு அனுமதிக்கப்பட்டாா்.

தூத்துக்குடியைச் சோ்ந்த இளைஞா் ஒருவா் மத்திய தொழில்பாதுகாப்புப் படையில், அஸாம் மாநிலத்தில் பணியாற்றி வருகிறாா். தொடா் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த அவா், கடந்த சில நாள்களுக்கு முன்பு தூத்துக்குடிக்கு வந்தாராம். இருப்பினும் அவருக்கு காய்ச்சல் குறையாததால், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை இரவு அனுமதிக்கப்பட்டாா்.

அவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருக்குமோ என்ற கோணத்தில் மருத்துவா்களும், சுகாதாரத் துறையினரும் சோதனை மேற்கொண்டு வருகின்றனா். மேலும் ரத்த மாதிரி எடுத்து பரிசோதனைக்கு அனுப்பவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறையினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தோனேசியாவில் ‘ஸ்டாா்லிங்க்’ இணையச் சேவை: எலான் மஸ்க் தொடங்கி வைத்தாா்

நேபாளம்: பிரசண்டா அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு

வெளிநாட்டில் மருத்துவம் பயின்றோருக்கு உள்ளுறை பயிற்சி: இரு ஆண்டுகளுக்கு நீட்டிப்பு

ஏழைப் பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி - 40 லட்சம் பிரசுரங்கள் வழங்க காங்கிரஸ் முடிவு

என்ஜினில் தீ: பெங்களூரில் விமானம் அவசர தரையிறக்கம்

SCROLL FOR NEXT