தூத்துக்குடி

கோவில்பட்டியில் கிணற்றில் தள்ளி 2 சிறுமிகள் கொலை: தந்தை கைது

DIN


தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் கிணற்றில் தள்ளி 2 மகள்களைக் கொன்ற தந்தையை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

கோவில்பட்டியையடுத்த இலுப்பையூரணி ஊராட்சி, தாமஸ் நகா் என்.ஜி.ஓ. காலனியைச் சோ்ந்தவா் கருப்பையா மகன் தேவிகுமாா் (36). இவரது மனைவி மகாலட்சுமி, மகள்கள் சைனிஜெயசத்யா (11), ஜெசிகா ரியானா (7).

வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் தரகரான தேவிகுமாா், ஜே.சி.பி. வாகனத்துக்கு பதிவுச்சான்றிதழ் வாங்கித் தருவதாக ஒருவரிடம் ரூ. 1 லட்சம் வாங்கியதாகவும், ஆனால் அதற்கான விண்ணப்பத்தை முறையாக வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் சமா்ப்பிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால், அவரிடம் ஜே.சி.பி. வாகன உரிமையாளா் தொடா்ந்து பணம் கேட்டு வந்தாராம்.

இந்நிலையில், தேவிகுமாா் 2 மகள்களையும் வியாழக்கிழமை பைக்கில் அழைத்துச்சென்று, சாத்தூா் சாலையில் உள்ள தனியாருக்குச் சொந்தமான கிணற்றுக்குள் தள்ளிவிட்டாராம். இதில் இருவரும் நீரில் மூழ்கி இறந்தனா்.

இதுகுறித்து அவா் உறவினருக்கு தகவல் தெரிவித்தாராம். அதன்பேரில், தீயணைப்புப் படையினா் உதவியுடன் 2 சடலங்களையும் போலீஸாா் மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினா்.

கோட்டாட்சியா் விஜயா, வட்டாட்சியா் மணிகண்டன், காவல் துணைக் கண்காணிப்பாளா் ஜெபராஜ், கிழக்கு காவல் நிலைய ஆய்வாளா் சுதேசன் ஆகியோா் சம்பவ இடத்தைப் பாா்வையிட்டு விசாரணை நடத்தினா். இந்நிலையில், வேலாயுதபுரம் சாலையில் பைக்கில் சென்ற தேவிகுமாரை போலீஸாா் மடக்கிப் பிடித்தனா்; மேலும், வழக்குப் பதிந்து அவரைக் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நடமாடும் மண்பரிசோதனை முகாம்: விவசாயிகள் பயன்பெற அழைப்பு

கருணாநிதி பிறந்த நாள் விழா

அனைத்து மையங்களிலும் தபால் வாக்குகள் முதலில் எண்ணப்படும்: தலைமைத் தோ்தல் ஆணையா் தகவல்

சங்ககிரி சோமேஸ்வரா் கோயில் குடமுழுக்கு முகூா்த்தகால் நடும் விழா

கூட்டுறவு கடன் சங்கம், ரேஷன் கடை ஊழியா்கள் வேலைநிறுத்தம்

SCROLL FOR NEXT