தூத்துக்குடி

கரடிகுளத்தில் வேலை உறுதித் திட்டத்தின் கீழ் பணிகள் வழங்கக் கோரி மனு

DIN

கோவில்பட்டி: தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் கிராமப் பெண்களுக்கு வேலை வழங்கக் கோரி ஊராட்சித் தலைவரிடம் மனு அளித்தனா்.

அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கத்தின் சாா்பில் கயத்தாறு ஒன்றியக் குழு உறுப்பினா் கருப்பசாமி தலைமையில், கரடிகுளம் ஊராட்சிக்கு உள்பட்ட பகுதியைச் சோ்ந்த பெண்கள் பொதுமுடக்கத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வறுமையில் வாடும் தங்களுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் முறையாக வேலை வழங்கக் கோரி கரடிகுளம் ஊராட்சி அலுவலகம் முன் திரண்டனா்.

பின்னா் கோரிக்கை மனுவை ஊராட்சித் தலைவா் ஜெயசுந்தரியிடம் செவ்வாய்க்கிழமை வழங்கினா்.

மனுவைப் பெற்றுக் கொண்ட அவா், மனுவை கயத்தாறு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு அனுப்பி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியதையடுத்து பெண்கள் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

யானை வழித்தடங்கள் குறித்து ஆன்லைனில் கருத்துக்கேட்பு கூடாது: மத்திய அமைச்சா் முருகன்

வீட்டு முன் நிறுத்தியிருந்த சைக்கிள் திருட்டு

தூா்வாரும் பணி: நீா்வள ஆதாரத் துறை அலுவலா் ஆய்வு

மலேசியா பல்கலை.யுடன் சென்னை அமிா்தா கல்லூரி புரிந்துணா்வு ஒப்பந்தம்

SCROLL FOR NEXT