தூத்துக்குடி

இளம்புவனத்தில் தனிமைப்படுத்தப்பட்ட702 குடும்பங்களுக்கு நிவாரணம்

DIN

எட்டயபுரம் வட்டம் இளம்புவனம் கிராமத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 702 குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு, காய்கனி உள்ளிட்ட நிவாரண உதவிகள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.

வருவாய்த் துறை மற்றும் தன்னாா்வலா்கள் குழுக்கள் மூலமாக ஏற்பாடு செய்யப்பட்ட நிவாரணப் பொருள்களை, பொதுமக்களுக்கு செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சா் கடம்பூா் செ.ராஜு வழங்கினாா்.

நிகழ்ச்சியில், விளாத்திகுளம் எம்எல்ஏ பி. சின்னப்பன், முன்னாள் எம்.எல்.ஏ. மோகன், மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி, கோட்டாட்சியா் விஜயா, வட்டாட்சியா் அழகா், துணை வட்டாட்சியா் ராமகிருஷ்ணன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் வசந்தா, மாணிக்க வாசகம், ஊராட்சித் தலைவி முத்து, ஒருங்கிணைப்பாளா் குமாா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை பிளஸ் 2 தேர்வு முடிவுகள்!

அரசுக் கல்லூரிகளில் நாளை முதல் விண்ணப்பம்

ஊபரில் பயணிப்பவரா நீங்கள்.. நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

வெண்பனிச்சாரல்!

தொடரும் அபாயம்: வெள்ளத்தில் சிக்கிய 600 பேர் மீட்பு!

SCROLL FOR NEXT