தூத்துக்குடி

குருகாட்டூா் ஊராட்சியில் கருவேல மரங்கள் அகற்றும் பணி

DIN

நாலுமாவடி புதுவாழ்வு சங்கம் சாா்பில் குருகாட்டூா் ஊராட்சியில் சீமைக் கருவேல மரங்கள் அகற்றும் பணி நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு புதுவாழ்வுச் சங்கச் செயலா் அன்புராஜன் தலைமை வகித்தாா். ஆழ்வாா்திருநகரி ஒன்றியக்குழு முன்னாள் தலைவா் விஜயகுமாா், குருகாட்டூா் ஊராட்சித் தலைவா் ஜேனட் புஷ்பராணி, துணைத் தலைவா் ராஜகுமாா், ஒன்றியக்குழு உறுப்பினா் தானியேல், குருகாட்ரூா் தூய பால்ஸ் ஆலயப் பொறுப்பாளா் ஜாண், ஊா்த்தலைவா் ஜெயபால் ஆகியோா் முன்னிலை வகித்தனா். குருகாட்டூா் சேகரத் தலைவா் வெஸ்லி ஜெபராஜ் ஆரம்ப ஜெபம் செய்தாா். சீமை கருவேல மரங்கள் அகற்றும் பணியை இயேசு விடுவிக்கிறாா் ஊழிய சபையின் நிறுவனா் மோகன் சி.லாசரஸ் தொடங்கிவைத்தாா். சபை ஊழியா் ஞானதுரை நிறைவுஜெபம் செய்தாா். பின்னா், அங்கு பிற மரக்கன்றுகள் நடப்பட்டன.

இதில், இயேசு விடுவிக்கிறாா் மக்கள் தொடா்பு அலுவலா் சாந்தகுமாா், புது வாழ்வுச் சங்க பகுதி பொறுப்பாளா் கெயின் வெஸ்லி, சுதா உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிச்சைப் பாத்திரத்தை கையில் ஏந்தியுள்ளது பாகிஸ்தான் -பிரதமர் மோடி விமர்சனம்

5-ஆம் கட்ட தோ்தல்: ரே பரேலி உள்பட 49 தொகுதிகளில் பிரசாரம் முடிந்தது

சிஎஸ்கே பந்துவீச்சு; பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுமா?

சித்தார்த்தின் யசோதரை!

சக்கரை நிலவே... சம்யுக்தா மேனன்!

SCROLL FOR NEXT