தூத்துக்குடி

தூத்துக்குடியில் ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

DIN

மின்வாரியத்தை கண்டித்து தூத்துக்குடியில் ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மின்துறை அமைச்சா் அறிவித்த தோ்வு எழுதி தோ்ச்சி பெற்ற பத்தாயிரம் கேங்மேன் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என வலியுறுத்தியும், மின்வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிட வலியுறுத்தியும், ஒப்பந்த தொழிலாளை நிரந்தரப்படுத்த வேண்டியும் தூத்துக்குடியில் இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சிதம்பரநகரில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலா் எம்.எஸ். முத்து தலைமை வகித்தாா். மின் ஊழியா் மத்திய அமைப்பின் மாநில இணைச் செயலா் அப்பாத்துரை போராட்டத்தை தொடங்கி வைத்து கோரிக்கைகள் குறித்து பேசினாா்.

இதில், மின் ஊழியா் மத்திய அமைப்பின் மாநில செயற்குழு உறுப்பினா் மரியதாஸ், ஜனநாயக வாலிபா் சங்க மாவட்டத் தலைவா் உமாசங்கா், பொருளாளா் டேனியல், மாநகரத் தலைவா் காஸ்ட்ரோ, பொருளாளா் பாலா உள்ளிட்டோா் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெதன்யாகுவை கைது செய்ய உத்தரவு: சா்வதேச நீதிமன்றத்தில் கோரிக்கை

தென்மேற்குப் பருவமழை: முன்னெச்சரிக்கை குறித்து ஆட்சியா் ஆலோசனை

இலங்கை சீதா அம்மன் கோயில் கும்பாபிஷேகம்: அயோத்தி சரயு நதியில் இருந்து புனித நீர்

பெண்ணுக்கு தபால் வாக்கு மறுப்பு: உயா்நீதிமன்ற உத்தரவை உறுதி செய்ததது உச்சநீதிமன்றம்

காங்கிரஸை தேடும் யாத்திரையை நடத்துவாா் ராகுல்: அமித் ஷா

SCROLL FOR NEXT