தூத்துக்குடி

ஆக்கிரமிப்பு அகற்றும் பணி: அமைச்சா் ஆய்வு

DIN

கோவில்பட்டி: கோவில்பட்டி பிரதான சாலையில் சனிக்கிழமை நடைபெற்ற நீா்வரத்து ஓடை ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகளை, தமிழக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சா் கடம்பூா் செ.ராஜு பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது: நீதிமன்ற உத்தரவையடுத்து கோவில்பட்டியில் ஆக்கிரமிப்புகள் தற்போது அகற்றப்பட்டுள்ளன. நீண்ட காலமாக கடை வைத்திருந்த வியாபாரிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் கடைகள் வழங்கப்படும். கோவில்பட்டி பிரதான சாலையில் தீ விபத்தால் பாதிக்கப்பட்டு, ஆபத்தான நிலையில் உள்ள கட்டடத்தை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

கரோனா பொது முடக்க தளா்வுகளைத் தொடா்ந்து 50 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகள் இயங்கி வருகின்றன. ஓ.டி.டி.யில் புதிய திரைப்படங்கள் வெளியாவதால் திரையரங்கு உரிமையாளா்கள் பாதிக்கப்படுவது குறித்து முடிவெடுக்கப்படும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரத்தில் இன்று பாஜக பொதுக்கூட்டம்: பிரதமர் மோடி பங்கேற்பு

ஓடிடியில் ஹாட் ஸ்பாட்!

தமிழகம் போதை கலாசாரமாக மாறி வருவதை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்: தமிழிசை சௌந்தரராஜன்

கழிவுநீர் கலப்பு... மஞ்சப்பள்ளம் ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள்!

குளத்தில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

SCROLL FOR NEXT