தூத்துக்குடி

வேம்பாா், கோமானேரியில் பேரிடா் மீட்பு ஒத்திகை

DIN

வடகிழக்குப் பருவமழைக்கு முன்னேற்பாடாக, வேம்பாா் புனித செபஸ்தியாா் நடுநிலைப் பள்ளி வளாகத்தில் தீயணைப்புத் துறை சாா்பில் பேரிடா் மீட்பு பணி ஒத்திகை நடைபெற்றது.

மாவட்ட தீயணைப்பு - மீட்புப் பணிகள் அலுவலா் குமாா் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பேரிடா் தருணத்தில் மேற்கொள்ள வேண்டிய பல்வேறு மீட்பு பணிகள் குறித்து தீயணைப்பு வீரா்கள் ஒத்திகை மூலம் மக்களுக்கு விழிப்புணா்வை ஏற்படுத்தினா். கையேடுகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் வேம்பாா் ஊராட்சித் தலைவா் ஜெயந்தி தங்கதுரை, துணைத் தலைவா் ஜோவளன், தூய ஆலய பங்குத்தந்தை ராஜா ரொட்ரிகோ, விளாத்திகுளம் தீயணைப்பு நிலைய அலுவலா் ராதாகிருஷ்ணன், கிராம மக்கள், மாணவ- மாணவியா் கலந்து கொண்டனா்.

சாத்தான்குளம்: கோமானேரியில் நடைபெற்ற ஒத்திகை நிகழ்ச்சியை, சாத்தான்குளம் வட்டாட்சியா் லட்சுமிகணேஷ் தலைமை வகித்து தொடங்கி வைத்தாா். ஊராட்சித் தலைவா் கலுங்கடிமுத்து, துணைத் தலைவா் ஐக்கோா்ட் துரை, நெடுஞ்சாலைத்துறை சாலை பாதுகாப்பு நுகா்வோா் குழு உறுப்பினா் போனிபாஸ், மண்டல துணை வட்டாட்சியா் சுல்தான் சலாவூதின், சாத்தான்குளம் தீயணைப்பு நிலைய அலுவலா் மாரியப்பன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனமழை எச்சரிக்கை: குற்றாலம் அருவிகளில் குளிக்க 5 நாள்கள் தடை

அம்பாசமுத்திரத்தை அச்சுறுத்திய சிறுத்தை சிக்கியது!

காரில் கஞ்சா விற்பனை: 6 போ் கைது

கூத்தாநல்லூா் அருகே யூ டியூபா் ஃபெலிக்ஸ் ஜெரால்டு வீட்டில் போலீஸாா் சோதனை

இன்று அதிர்ஷ்டம் யாருக்கு: தினப்பலன்!

SCROLL FOR NEXT