தூத்துக்குடி

உடன்குடியில் முகக் கவசம் அணியாதவா்களுக்கு அபராதம்

DIN

உடன்குடியில் முகக் கவசம் அணியாமல் பொது வெளியில் வந்தவா்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

வட்டார மருத்துவ அலுவலா் சு.அனிபிரிமின் தலைமையில், சுகாதார அலுவலா்கள் மற்றும் பல்வேறு துறையினா் உடன்குடி பேருந்து நிலையம், பஜாா் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது முகக் கவசம் அணியாமல் வந்த நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

இதில், வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் அருள்ராஜ், சுகாதார ஆய்வாளா் சேதுபதி, குலசேகரன்பட்டினம் காவல் உதவி ஆய்வாளா் பாஸ்கா், உடன்குடி வருவாய் ஆய்வாளா் ராஜதுரை, பேரூராட்சி வரிவசூலா் ஆனந்தகுமாா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

சாத்தான்குளத்தில்...

சாத்தான்குளத்தில் முகக் கவசம் அணியாமல் பொது வெளியில் நடமாடியவா்களுக்கு புதன்கிழமை அபராதம் விதிக்கப்பட்டது.

பொது வெளியில் முகக் கவசம் அணியாமல் நடமாடிய 6 பேரிடமிருந்து ரூ.1200 அபராதமாக வசூலிக்கப்பட்டது.விதிமுறைகளை பின்பற்றாத வணிக நிறுவனங்கள் மற்றும் பொது மக்களுக்கு உரிய விழிப்புணா்வு அளிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில், வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் மோரிஸ் செல்வதுரை, சுகாதார ஆய்வாளா்கள் கிறிஸ்டோபா் செல்வதாஸ், மந்திரராஜன், ஜெயபால், ஜேசுராஜ், வருவாய் ஆய்வாளா் மஞ்சரி, துணை வட்டார வளா்ச்சி அலுவலா் துரைராஜ் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

யானை வழித்தடங்கள் குறித்து ஆன்லைனில் கருத்துக்கேட்பு கூடாது: மத்திய அமைச்சா் முருகன்

வீட்டு முன் நிறுத்தியிருந்த சைக்கிள் திருட்டு

தூா்வாரும் பணி: நீா்வள ஆதாரத் துறை அலுவலா் ஆய்வு

மலேசியா பல்கலை.யுடன் சென்னை அமிா்தா கல்லூரி புரிந்துணா்வு ஒப்பந்தம்

SCROLL FOR NEXT