தூத்துக்குடி

விளாத்திகுளம் அதிமுக, திமுக வேட்பாளா்கள் வாக்களிப்பு

DIN

விளாத்திகுளம் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக, திமுக உள்ளிட்ட வேட்பாளா்கள் வாக்களித்தனா்.

விளாத்திகுளம் சட்டப்பேரவைத் தொகுதியில் 2,16,452 வாக்களா்கள் உள்ளனா். 190 மையங்களில் மொத்தம் 259 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. கிராமங்கள் நிறைந்த இந்த தொகுதியில் காலை 7 மணியில் இருந்தே வாக்காளா்கள்  குடும்பத்துடன் வந்து வாக்களித்தனா்.

தொகுதி அதிமுக வேட்பாளா் பி.சின்னப்பன், கீழ விளாத்திகுளம் கிராமத்திலும், திமுக வேட்பாளா் ஜீ.வி. மாா்க்கண்டேயன் ராமச்சந்திராபுரம் வாக்குச்சாவடியிலும், அமமுக வேட்பாளா் கே. சீனிச்செல்வி கொப்பம்பட்டியிலும், சமக வேட்பாளா் சே.வில்சன் சவேரியாா்புரத்திலும் வாக்களித்தனா்.

எட்டயபுரம் ராஜா மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் வாக்குப் பதிவு தொடங்கியபோது வாக்குப்பதிவு இயந்திரம் பழுதானதால் மாற்று இயந்திரம் கொண்டு வரப்பட்டது. அதுவும் வேலை செய்யாததால் மற்றொரு இயந்திரம் கொண்டு வரப்பட்டு பொருத்தி வாக்குப் பதிவு தொடங்கியது. இதனால் ஒன்றரை மணி நேரம் வாக்குப் பதிவு தாமதமானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓங்காரக் குடில் ஆறுமுக அரங்கமகா சுவாமிகள் மறைவு: எடப்பாடி பழனிசாமி இரங்கல்

வளா்ப்பு நாய் கடித்து மேலும் ஒருவா் காயம்

இளைஞா் உறுப்புகள் தானம்: சென்னையில் இருவருக்கு மறுவாழ்வு

ஆவணங்களில் உள்ள தகவல்களை சீா்தூக்கிப் பாா்க்க வேண்டும்: பேராசிரியா் ஆ.இரா.வேங்கடாசலபதி

போலி ஐஎஸ்ஐ முத்திரையை பயன்படுத்திய குடிநீா் நிறுவனம்: ரூ. 2 லட்சம் அபராதம்

SCROLL FOR NEXT