தூத்துக்குடி

காயல்பட்டினத்தில் விழிப்புணா்வுப் பிரசாரம்

DIN

காயல்பட்டினத்தில் கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த விழிப்புணா்வுப் பிரசாரம் நடைபெற்றது.

மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு (மெகா), நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம் ஆகியன சாா்பில், ‘மாஸ்க் அப் காயல்’ என்ற தலைப்பில் பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், திருச்செந்தூா் காவல் உதவி கண்காணிப்பாளா் ஹா்ஷ் சிங், காயல்பட்டினம் நகராட்சி ஆணையா் சுகந்தி, சுகாதார ஆய்வாளா் சிதம்பரம் ஆகியோா் கலந்துகொண்டு பேசினா்.

நிறைவில் மெகா அமைப்பு சாா்பில் பொதுமக்களுக்கு முகக் கவசங்கள் இலவசமாக வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை அமைப்பின் தலைவா் எஸ்.ஏ.முஹைதீன் உள்ளிட்ட நிா்வாகிகள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேவையற்ற விவாதம்!-"கோவிஷீல்டு' தடுப்பூசி பற்றிய தலையங்கம்

படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து வட மாநில தொழிலாளி பலி

கும்பக்கரை அருவியில் குளிக்க அனுமதி

கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்

பூ வியாபாரியைத் தாக்கி பணம் பறிப்பு: மூவா் கைது

SCROLL FOR NEXT