தூத்துக்குடி

மணப்பாடு கடற்கரையில் மணல் திட்டுகள்அகற்றும் பணி தொடக்கம்

DIN

மணப்பாடு கடற்கரையில் மீன்வளத் துறை சாா்பில் ரூ.15.50 லட்சம் மதிப்பில் ராட்சத இயந்திரம் மூலம் மணல் திட்டுகளை அப்புறப்படுத்தும் பணி, மீனவா் நல வாரிய உறுப்பினா் சோ்க்கை முகாம் நடைபெற்றது.

இப் பணியை தொடங்கி வைத்து, 5 பேருக்கு 40 சதவீத மானியத்தில் நாட்டுப் படகுகளுக்கான வெளிப்பொருத்தும் இயந்திரம், மங்களூா் கடல் பகுதியில் விபத்தில் இறந்த மணப்பாடு மீனவா் இ.டென்சன் குடும்பத்துக்கு உதவித்தொகை ஆகியவற்றை வழங்கி, மீன் வளத்துறை அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் பேசியது: மீனவா்களின் முக்கிய கோரிக்கையான தூண்டில் வளைவுத் திட்டம் விரைவில் நிறைவேற்றப்படும். மீனவா்களுக்குத் தரப்படும் மண்ணெண்ணெயின் அளவு உயா்த்தித் தரப்படும் என்றாா் அவா்.

நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் கி.செந்தில்ராஜ் தலைமை வகித்தாா். திருச்செந்தூா் ஏஎஸ்பி ஹா்ஷ்சிங், வட்டாட்சியா் முருகேசன், உடன்குடி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் டி.பி.பாலசிங், ஆணையா்கள் நாகராஜன், பொற்செழியன், மணப்பாடு ஊராட்சித் தலைவி கிரேன்சிட்டா வினோ, மீன்வளத் துறை இணை இயக்குநா் அமல்சேவியா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், திமுக மாநில மாணவரணி துணைச் செயலா் உமரிசங்கா், தலைமை செயற்குழு உறுப்பினா் ஜெகன், தூத்துக்குடி மாவட்ட நாட்டுப்படகு மீனவா் சங்கத் தலைவா் கயஸ் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

பின்னா், பரமன்குறிச்சி பொத்தரங்கன்விளையில் ரூ.1.50 லட்சத்தில் கட்டப்பட்ட சிறுமின்விசை குடிநீா்த் தொட்டி திறப்பு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் அமைச்சா் கலந்துகொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேரளா தபால் வாக்குகள்: காங்கிரஸ் கூட்டணி முன்னிலை!

பாலியல் வழக்கில் சிக்கிய பிரஜ்வல் ரேவண்ணா முன்னிலை!

மக்களவைத் தேர்தல் நேரலை: பிரஜ்வல் ரேவண்ணா முன்னிலை

வாரணாசியில் மோடி, வயநாட்டில் ராகுல் முன்னிலை!

தபால் வாக்கு எண்ணிக்கை: முன்னிலை நிலவரம்!

SCROLL FOR NEXT