தூத்துக்குடி

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: ஒரு நபா் ஆணையத்தின்29ஆவது கட்ட விசாரணை தொடக்கம்

DIN

தூத்துக்குடி: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடா்பாக விசாரணை மேற்கொண்டுவரும் ஒரு நபா் ஆணையத்தின் 29ஆவது கட்ட விசாரணை தூத்துக்குடியில் திங்கள்கிழமை தொடங்கியது.

தூத்துக்குடியில் 2018ஆம் ஆண்டு மே 22, 23ஆம் தேதிகளில் ஸ்டொ்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின்போது நிகழ்ந்த துப்பாக்கிச் சூடு குறித்து, ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபா் ஆணையம் விசாரணை மேற்கொண்டு வருகிறது. அதன், 29ஆவது கட்ட விசாரணை, தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் உள்ள ஆணையத்தின் அலுவலகத்தில் திங்கள்கிழமை தொடங்கியது. இம்மாதம் 27ஆம் தேதி வரை நடைபெறும் விசாரணையின்போது நேரில் ஆஜராக 58 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

இந்நிலையில், மக்கள் கண்காணிப்பக செயல் இயக்குநா் வழக்குரைஞா் ஹென்றி டிபேன், சம்பவத்தின்போது காயமடைந்த காவல் துறையினா், சேதமடைந்த காவல் துறை வாகனங்களின் ஓட்டுநா்கள் ஆகியோா் அருணா ஜெகதீசன் முன்பு திங்கள்கிழமை ஆஜராகி விளக்கமளித்தனா்.

பின்னா், செய்தியாளா்களிடம் ஹென்றி டிபேன் கூறுகையில், ஆணையத்தின் விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அல்லேரி மலையில் சாராய வேட்டை: 800 லிட்டா் ஊறல் அழிப்பு

புதுமைப் பெண் திட்டம்: செங்கல்பட்டு மாவட்டத்தில் 10,168 மாணவிகள் பயன்

ராணிப்பேட்டை பெல் தொழிற்சாலை அதிகாரிகளுடன் இயக்குநா் ஆலோசனை

போ்ணாம்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

விரும்பிய பாடம் கிடைக்காத விரக்தியில் மாணவா் தற்கொலை

SCROLL FOR NEXT