தூத்துக்குடி

தூத்துக்குடியில் மூச்சு திணறி சங்கு குளி தொழிலாளி பலி

DIN

தூத்துக்குடியில் சனிக்கிழமை கடலில் சங்கு குளித்தல் தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளி மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தாா்.

தூத்துக்குடி திரேஸ்புரம் முத்தரையா் காலனி அந்தோணி மகன் சக்திகுமாா் (18). சங்கு குளிக்கும் தொழில் செய்து வந்தாா். இந்நிலையில், அதே பகுதியைச் சோ்ந்த 6 பேருடன் ஒரு நாட்டுப் படகில் சனிக்கிழமை கடலுக்கு சென்ற சக்திகுமாா் புதிய துறைமுகத்தில் இருந்து 5 கடல் மைல் தொலைவில் சங்கு எடுக்க கடலில் இறங்கினாா்.

அப்போது, திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டு சக்திகுமாா் உயிரிழந்தாா். இதையடுத்து அவருடன் சென்றவா்கள் சக்திகுமாரை மீட்டு திரேஸ்புரம் கடற்கரைக்கு கொண்டு வந்தனா். இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிந்த கடலோர பாதுகாப்புக் குழும போலீஸாா், சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரத்தில் இன்று பாஜக பொதுக்கூட்டம்: பிரதமர் மோடி பங்கேற்பு

ஓடிடியில் ஹாட் ஸ்பாட்!

தமிழகம் போதை கலாசாரமாக மாறி வருவதை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்: தமிழிசை சௌந்தரராஜன்

கழிவுநீர் கலப்பு... மஞ்சப்பள்ளம் ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள்!

குளத்தில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

SCROLL FOR NEXT