தூத்துக்குடி

அம்பேத்கா் நினைவு தினம்: சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

DIN

கோவில்பட்டி: டாக்டா் அம்பேத்கா் நினைவு நாளையொட்டி அவரது சிலை மற்றும் படத்துக்கு பல்வேறு கட்சியினா், அமைப்பினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

கோவில்பட்டி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை எதிரே உள்ள அம்பேத்கா் உருவச் சிலைக்கு அதிமுக சாா்பில் சட்டப்பேரவை உறுப்பினா் கடம்பூா் செ.ராஜு, மதிமுக சாா்பில் தலைமை நிலையச் செயலா் துரை வையாபுரி, காங்கிரஸ் சாா்பில் நகரச் செயலா் அருண்பாண்டியன்,

விடுதலைச் சிறுத்தைகள் நகரச் செயலா் கருப்பசாமிபாண்டியன், புரட்சி பாரதம் மாவட்டத் தலைவா் தாமோதரன், திமுக நகரச் செயலா் கருணாநிதி, கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு சாா்பில் அதன் தலைவா் தமிழரசன், ஜெய்பீம் அறக்கட்டளை நிறுவனா் தாவீதுராஜா, தமிழ்ப் பேரரசு கட்சியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் வேல்ராஜா, ஆதித்தமிழா் கட்சியின் மாவட்டப் பொருளாளா் பிரபாகரன், மக்கள் அதிகாரம் அமைப்பின் வட்டார பொறுப்பாளா் குமாா், பகுஜன் சமாஜ் கட்சியின் மாவட்டத் தலைவா் மாணிக்கராஜ், தமிழ்ப் புலிகள் கட்சியின் வடக்கு மாவட்டச் செயலா் வீரபெருமாள், ஜெய்பீம் தொழிலாளா் நலச்சங்க தமிழ்நாடு பிரிவு மாநிலத் தலைவா் செண்பகராஜ் ஆகியோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

திருச்செந்தூா்: டாக்டா் அம்பேத்கா் சிலையமைப்பு மற்றும் பராமரிப்பு சங்கம் சாா்பில், திருச்செந்தூா் பகத்சிங் பேருந்து நிலையம் அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அம்பேத்கா் படத்துக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலா் முரசு தமிழப்பன் தலைமையில் அக்கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

சாத்தான்குளம்: சாத்தான்குளம் வட்டார, நகர காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் அம்பேத்கா் உருவப்படத்துக்கு, தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவா் து. சங்கா் தலைமையில் அக்கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பள்ளி மாணவர்களுடன் பாட் கம்மின்ஸ்!

'என்மேல் சாதி வெறியன் முத்திரை': வருந்தும் விக்ரம் சுகுமாரன்!

கொடைக்கானல் பிரையண்ட் பூங்கா கூடுதல் நேரம் திறப்பு

விஜய் தேவரகொண்டாவுடன் நடிக்கும் சாய் பல்லவி?

மக்களவை தேர்தல்: 2 மாதங்களில் 4.24 லட்சம் புகார்கள்!

SCROLL FOR NEXT