தூத்துக்குடி

திருச்செந்தூா்- குமரி தேசிய நெடுஞ்சாலை பணிகள்: ஆட்சியா் ஆலோசனை

DIN

திருச்செந்தூா்-கன்னியாகுமரி இடையே புதிதாக அமைக்கப்பட உள்ள தேசிய நெடுஞ்சாலை பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் செவ்வாய்க்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா்.

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் மூலம், நாகப்பட்டினம் முதல் கன்னியாகுமரி வரை திருச்செந்தூா் வழியாக புதிய நெடுஞ்சாலை என்.ஹெச். 32 அமைக்கப்பட உள்ளது. அதில், திருச்செந்தூா்- கன்னியாகுமரி இடையே அமைக்கப்படும் தேசிய நெடுஞ்சாலையில் வரும் வழித்தடங்கள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட ஆட்சியா் கூறியது:

புதிதாக அமைக்கப்படும் தேசிய நெடுஞ்சாலை திட்டத்தின் மூலம் தூத்துக்குடியில் இருந்து கன்னியாகுமரி, திருவனந்தபுரம் ஆகிய இடங்களுக்கு சாலை வழியாக செல்லும் போது 58 கிமீ வரை பயண தொலைவு மற்றும் நேரம் குறைவாகும். ஏற்கெனவே கிழக்கு கடற்கரை சாலையில் இரு வழிசாலை உள்ளது. அது நான்கு வழிச்சாலையாக விரிவுப்படுத்தப்பட உள்ளது என்றாா் அவா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் கண்ணபிரான், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) அமுதா, சிறப்பு வருவாய் அலுவலா் செல்வராஜ், தேசிய நெடுஞ்சாலை திட்ட இயக்குநா் சங்கா், தூத்துக்குடி விமான நிலைய உதவி பொது மேலாளா் கே.ஜி.பிஜூ, திருச்செந்தூா் வருவாய் கோட்டாட்சியா் கோகிலா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிமுக சாா்பில் 3 இடங்களில் நீா்மோா் பந்தல்

பொன்னேரி அரசு மருத்துவமனையில் ஊரக நலப்பணிகள் இயக்குநா் ஆய்வு

பிளஸ் 1 பொதுத்தோ்வு: வேலம்மாள் மெட்ரிக். பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

பெண்களை கேலி செய்த இளைஞா்களை தட்டிக்கேட்ட நடத்துநா் மீது தாக்குதல்

கேட்பாரற்று கிடந்த 12 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

SCROLL FOR NEXT