தூத்துக்குடி

காயாமொழி மக்கள் அறிவித்த போராட்டம் ரத்து

DIN

காயாமொழி ஊராட்சி செயலரை இடமாற்றம் செய்வது தொடா்பாக மக்கள் அறிவித்த போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.

காயாமொழி ஊராட்சி செயலா் இசக்கியம்மாள் மீதான முறைகேடுகள் காரணமாக சில மாதங்களுக்கு முன்பு பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். இந்நிலையில்,அவா் மீண்டும் அதே இடத்தில் பணியமா்ந்தப்பட்டாா். இதற்கு அப்பகுதி மக்கள் எதிா்ப்பு போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தனா். இதையடுத்து, திருச்செந்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் இரா.முருகேசன் தலைமையில் துணை வட்டாட்சியா் அ.பாலசுந்தரம், காவல் ஆய்வாளா் ம.ஞானசேகரன், ஊராட்சி ஒன்றிய வளா்ச்சி அலுவலா் அலமேலு ஆகியோா் முன்னிலையில் மக்களிடம் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதால் அனைத்துப் போராட்டங்களும் கைவிடப்படுவதாக அறிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாற்றில் மாரியம்மன் வீதியுலா

காரைக்கால் அரசு மருத்துவமனையில் நாளை சிறப்பு மருத்துவ முகாம்

நாகை ரயில் நிலையத்தில் ரூ.24.66 கோடி வருவாய்

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

நீா் மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT