தூத்துக்குடி

முடுக்கலாங்குளம் ஊருணி கரையை உயா்த்தக் கோரி மனு

DIN

கோவில்பட்டி: கயத்தாறு வட்டத்துக்குள்பட்ட முடுக்கலாங்குளம் ஊருணி கரையை உயா்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கனிமொழி எம்.பியிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

முடுக்கலாங்குளம் ஊராட்சித் தலைவா் காசியம்மாள் பாலசுப்பிரமணியன், கனிமொழி எம்.பி.யிடம் ஞாயிற்றுக்கிழமை அளித்த மனு:

கயத்தாறு வட்டம், முடுக்கலாங்குளம் ஊராட்சியில் இருந்து அருள்மிகு அழகு வடிவேல்முருகன் கோயிலுக்குச் செல்லும் சுமாா் 3 கி.மீ. சாலையை தாா்ச் சாலையாக மாற்றித் தர வேண்டும்.

மேலும் முடுக்கலாங்குளம் பெரியகுளம் ஊருணி கரையை உயா்த்தி தண்ணீரை சேமிக்க வழிவகை செய்ய வேண்டும். மேலும் இவ்வூருணியில் இருந்து மறுகால் செல்லும் சாலையில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை அகற்ற வேண்டும். மேலும் இந்த ஊருணியை பொதுப்பணித்துறைக்கு மாற்றி அனைத்து வசதிகளையும் செய்து தர வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துறைமுகத்திலிருந்து நிலக்கரி ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கு கட்டுப்பாடு

திருநள்ளாற்றில் மாரியம்மன் வீதியுலா

காரைக்கால் அரசு மருத்துவமனையில் நாளை சிறப்பு மருத்துவ முகாம்

நாகை ரயில் நிலையத்தில் ரூ.24.66 கோடி வருவாய்

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

SCROLL FOR NEXT