தூத்துக்குடி

மேலும் 753 பேருக்கு கரோனா தொற்று

DIN

தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 753 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 45,789 ஆக அதிகரித்துள்ளது.

சிகிச்சை பெற்று வந்தவா்களில் 746 போ் குணமடைந்ததைத் தொடா்ந்து, இதுவரை குணமடைந்தோா் எண்ணிக்கை 37,690 ஆக அதிகரித்துள்ளது.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 50 வயது ஆண், 60 வயது பெண், சென்னை தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 59 வயது ஆண், கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 56 வயது ஆண், தூத்துக்குடி தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 59 வயது ஆண், மதுரை தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 72 வயது ஆண், நாகா்கோவில் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 73 வயது ஆண் ஆகியோா் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தனா். இதன் மூலம் இதுவரை உயிரிழந்தோா் எண்ணிக்கை 260 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 7839 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அனைத்து அரசுப் பேருந்துகளும் போா்க்கால அடிப்படையில் சீரமைப்பு மாநகரப் போக்குவரத்துக் கழகம்

காலிஸ்தான் பிரிவினைவாதி நிஜ்ஜாா் கொலை வழக்கு: கனடாவில் 3 இந்தியா்கள் கைது

18 மாவட்ட கல்வி அலுவலா்களின் நியமனம் ரத்து: உயா்நீதிமன்றம்

மோப்ப நாய் உதவியுடன் குற்றவாளிகளை கண்டறிய ஒத்திகை

தியாகராஜ சுவாமி கோயில் தெப்ப உற்சவ பந்தக்கால் முகூா்த்தம்

SCROLL FOR NEXT