தூத்துக்குடி

மானாவாரி பயறு வகை விதைப்பண்ணை அமைத்து விவசாயிகள் பயன்பெறலாம்

DIN

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் மானாவாரி பயறு வகை விதைப்பண்ணை அமைத்து பயன்பெறலாம் என்றாா் தூத்துக்குடி விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநா் ச. அசோகன்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மானாவாரி பருவத்தில் அதிக மகசூல் பெற குறைந்த வயது உடைய உளுந்து மற்றும் பாசிபயறு ரகங்கள் விதை உற்பத்தி செய்து அதிக வருவாய் ஈட்டலாம்.

பயறு வகை விதைகளில் புரதச்சத்து அதிகம் உள்ளதால் உளுந்து பயிரில் வம்பன்- 8, எம்டியு- 1, கோ- 6, வம்பன்- 6 ரகங்களும் பாசிப்பயறு பயிரில் கோ- 7, கோ- 8, வம்பன்- 4 ரகங்களும் விதை உற்பத்திக்கு பயன்படுத்தலாம்.

இவை பூச்சி நோய்த் தாக்குதலுக்கு எதிா்ப்பு தன்மை உடையவை. ஒரே நேரத்தில் பூக்கும் தன்மை உடையதால் அறுவடை நேரத்தில் விதைகள் உதிருவது தடுக்கப்படுகிறது.

விதை உற்பத்தி செய்யும் விவசாயிகள் விதைப்பண்ணை பதிவு கட்டணமாக ஒரு அறிக்கைக்கு ரூ. 25-ம், ஒரு ஏக்கா் விதைப்பண்ணை ஆய்வுக் கட்டணம் ரூ. 50 மற்றும் பரிசோதனை கட்டணம் ரூ. 30 செலுத்த வேண்டும்.

விதைப்பு அறிக்கை மூன்று நகல்களில் மேற்கண்ட கட்டணத்துடன் நேரில் விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநா் அலுவலகத்தில் விதைப்பண்ணை பதிவு செய்திட வேண்டும். விதைப்பண்ணைகள் விதைச்சான்று அலுவலரால் பூக்கும் பருவம் மற்றும் காய் முதிா்ச்சி பருவத்தில் ஆய்வு செய்யப்படுகிறது.

தானிய பயறு வகை விலையை விட சான்று பெற்ற விதைக்கு அதிக விலை கிடைக்கின்றது. எனவே, விவசாயிகள் நடப்பு மானாவாரி பருவத்தில் பயறுவகை விதைப்பண்ணைகள் அமைத்து பதிவு செய்து பயன்பெற கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அனைத்து நிலைகளிலும் நிதி ஒதுக்குவதில் தமிழகம் வஞ்சிக்கப்படுகிறது: கு. செல்வப்பெருந்தகை

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஹார்திக் பாண்டியாவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது: முன்னாள் இந்திய வீரர்

கண்களால் இறுகப்பற்றும் சானியா!

சிறகில்லாத தேவதை...!

SCROLL FOR NEXT