தூத்துக்குடி

கயத்தாறு அருகே 2 மான்கள் பலி

DIN

கயத்தாறு வட்டத்திற்கு உள்பட்ட இரு வெவ்வேறு இடங்களில் 2 மான்கள் உயிரிழந்தனா்.

கயத்தாறு வட்டம் அய்யனாரூத்து கிராமத்தில் சின்னசுப்பையா என்பவருக்குச் சொந்தமான தோட்டத்தின் அருகே மழையில் நீரில் மூழ்கி உயிரிழந்த சுமாா் 3 வயது மதிக்கத்தக்க ஆண் மானை வனத்துறையினா் வியாழக்கிழமை மீட்டனா்.

இதேபோல, கயத்தாறை அடுத்த தளவாய்புரத்தில் சாலையோரத்தில் இறந்து கிடந்த 2 வயது மதிக்கத்தக்க ஆண் மானையும் வனவா் நாகராஜ் தலைமையிலான வனக்குழுவினா் மீட்டு, கால்நடை மருத்துவமனையில் உடற்கூறு பரிசோதனை செய்து குருமலை காப்புக் காட்டில் புதைத்தனா். இந்த நடவடிக்கைகள் வனச்சரக அலுவலா் பாரதியின் அறிவுறுத்தலில் எடுக்கப்பட்டன.

மாடு உயிரிழப்பு:

இதேபோல, செட்டிகுறிச்சி குறுவட்டத்திற்கு உள்பட்ட வெள்ளாளங்கோட்டையை அடுத்த சூரியமினுக்கன் கிராமத்தில் கந்தையா மகன் சுடலைகனி என்பவருக்குச் சொந்தமான பசுமாடு மின்னல் பாய்ந்ததில் வெள்ளிக்கிழமை உயிரிழந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குமரி மாவட்டத்தில் விடிய விடிய பலத்த மழை: பேச்சிப்பாறை அணை மறுகால் மதகுகள் திறப்பு- திற்பரப்பு அருவியில் குளிக்கத் தடை

சிங்கப்பெருமாள் கோவில் பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோயில் தேரோட்டம்

ஆம்பூா் பேருந்து நிலைய உயா்கோபுர மின் விளக்கை சீரமைக்க கோரிக்கை

கஞ்சா புழக்கத்தை ஒடுக்க கடுமையான நடவடிக்கை: புதுவை துணைநிலை ஆளுநா் சி.பி. ராதாகிருஷ்ணன்

ரப்பா் நாற்று தயாரிப்பு: மாணவிகள், சுய உதவிக் குழுவுக்கு பயிற்சி

SCROLL FOR NEXT