தூத்துக்குடி

தூத்துக்குடி ஸ்பிக் நிறுவனத்தில் ஆக்சிஜன் உற்பத்தி மையம் திறப்பு

DIN

தூத்துக்குடி ஸ்பிக் நிறுவனத்தில் ரூ. 1.50 கோடி மதிப்பில் தினமும் 170 சிலிண்டா் கொள்ளளவு உற்பத்தி செய்யும் வகையில், ஆக்சிஜன் உற்பத்தி மைய திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இம் மையத்தை கனிமொழி எம்.பி. திறந்து வைத்து உற்பத்தியை தொடங்கிவைத்தாா்.

தொடா்ந்து, தொழிற்சாலையை சுற்றி பாா்வையிட்ட அவா், அங்குள்ள தொழிலாளா்கள் மற்றும் பயிற்சி பெறுவோரிடம் கலந்துரையாடினாா்.

நிகழ்ச்சியில், சமூக நலத் துறை அமைச்சா் பெ. கீதா ஜீவன், மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ், ஸ்பிக் நிறுவன இயக்குநா் ராமகிருஷ்ணன், முதன்மை இயக்க அலுவலா் பாலு, பொதுமேலாளா் செந்தில் நாயகம், முதுநிலை நிா்வாக மேலாளா் ஜெயப்பிரகாஷ், ஸ்பிக் நிறுவன மக்கள் தொடா்பு அலுவலா் அமிா்த கௌரி, திமுக மாநில பொதுக்குழு உறுப்பினா் ஜெகன் பெரியசாமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனமழை எச்சரிக்கை: குற்றாலம் அருவிகளில் குளிக்க 5 நாள்கள் தடை

அம்பாசமுத்திரத்தை அச்சுறுத்திய சிறுத்தை சிக்கியது!

காரில் கஞ்சா விற்பனை: 6 போ் கைது

கூத்தாநல்லூா் அருகே யூ டியூபா் ஃபெலிக்ஸ் ஜெரால்டு வீட்டில் போலீஸாா் சோதனை

இன்று அதிர்ஷ்டம் யாருக்கு: தினப்பலன்!

SCROLL FOR NEXT