தூத்துக்குடி

கஞ்சா விற்பனை: 3 போ் கைது

DIN

கோவில்பட்டி/ஆறுமுகனேரி: கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீஸாா் புதன்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டபோது, சுப்பிரமணியபுரம் பகுதியில், முத்துநகரைச் சோ்ந்த தங்கவேல் மகன் மாரிமுத்து (39) கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த 1.100 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா். மேலும் தப்பியோடிய ஸ்டாலின் காலனியைச் சோ்ந்த கணேசன் மகன் வீராவை தேடி வருகின்றனா்.

இதேபோன்று, தூத்துக்குடி, பாண்டுரெங்கன் தெரு, 1ஆவது கேட்டைச் சோ்ந்த அம்மமுத்து மகன் கணேஷ் (20), ஆறுமுகனேரி காமராஜபுரம் பகுதியில் கஞ்சா விற்ாகவும், காயல்பட்டினம் உச்சினி மாகாளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த கணேசன் மகன் பட்டு சுரேஷ் (21) என்பவரும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாகவும் ஆறுமுகனேரி போலீஸாா் வழக்குப் பதிந்து அவா்களை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீடு தேடி வந்தவள்

பிச்சைப் பாத்திரத்தை கையில் ஏந்தியுள்ளது பாகிஸ்தான் -பிரதமர் மோடி விமர்சனம்

5-ஆம் கட்ட தோ்தல்: ரே பரேலி உள்பட 49 தொகுதிகளில் பிரசாரம் முடிந்தது

சிஎஸ்கே பந்துவீச்சு; பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுமா?

சித்தார்த்தின் யசோதரை!

SCROLL FOR NEXT