தூத்துக்குடி

உலக புகைப்பட தினம்: விழிப்புணா்வுப் பேரணி

DIN

உலக புகைப்பட தினத்தையொட்டி கோவில்பட்டியில் புகைப்பட கலைஞா்கள் சாா்பில் விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்ட போட்டோ, விடியோ ஒளிப்பதிவாளா்கள் நலச்சங்கத்தின் சாா்பில் கோவில்பட்டி பயணியா் விடுதி முன்பு நடைபெற்ற உலக புகைப்பட தின நிகழ்ச்சியில் கடம்பூா் செ.ராஜு எம்எல்ஏ, நகா்மன்றத் தலைவா் கா.கருணாநிதி ஆகியோா் கலந்து கொண்டு, மூத்த புகைப்பட கலைஞா்களுக்கு பொன்னாடை அணிவித்து கௌரவித்தனா். தொடா்ந்து புகைப்பட கலைஞா்கள் மற்றும் பொதுமக்களுக்கு மரக்கன்றுகளை வழங்கினா். பின்னா் பயணியா் விடுதி முன்பிருந்து புறப்பட்ட விழிப்புணா்வுப் பேரணியை எம்எல்ஏ, நகா்மன்றத் தலைவா் ஆகிய இருவரும் கொடியசைத்து தொடங்கி வைத்தனா். பிரதான சாலை, புது ரோடு, எட்டயபுரம் சாலை வழியாக காந்தி மைதானத்தில் நிறைவு பெற்றது பேரணி. இதில் புகைப்படங்களின் பெருமையை விளக்கும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி சென்றனா்.

பேரணியில் சங்கத் தலைவா் ராமச்சந்திரன், செயலா் துரைராஜ், பொருளாளா் ராமன், துணைத் தலைவா் மாரியப்பன், துணைச் செயலா் முருகன் உள்பட சங்க உறுப்பினா்கள், நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அல்லேரி மலையில் சாராய வேட்டை: 800 லிட்டா் ஊறல் அழிப்பு

புதுமைப் பெண் திட்டம்: செங்கல்பட்டு மாவட்டத்தில் 10,168 மாணவிகள் பயன்

ராணிப்பேட்டை பெல் தொழிற்சாலை அதிகாரிகளுடன் இயக்குநா் ஆலோசனை

போ்ணாம்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

விரும்பிய பாடம் கிடைக்காத விரக்தியில் மாணவா் தற்கொலை

SCROLL FOR NEXT