தூத்துக்குடி

குலசேகரன்பட்டினத்தில் புதிய ஊராட்சி அலுவலகக் கட்டடம் திறப்பு

DIN

குலசேகரன்பட்டினத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் ரூ. 22.65 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய ஊராட்சி அலுவலகக் கட்டடத் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

இக்கட்டடத்தை மீன்வளம், மீனவா் நலம், கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் திறந்துவைத்து, நலத்திட்ட உதவிகள் வழங்கினாா்.

ஊராட்சித் தலைவி சொா்ணப்பிரியா தலைமை வகித்தாா். மாவட்ட ஊராட்சித் தலைவா் பிரம்மசக்தி, மாவட்ட கூடுதல் ஆட்சியா் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஜான்சிராணி, பழனிச்சாமி, ஊராட்சி துணைத் தலைவா் கணேசன், உடன்குடி ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினா் முருகேஸ்வரி ராஜதுரை, மாவட்ட ஊராட்சி உறுப்பினா் ஜெசிபொன்ராணி, உடன்குடி கிழக்கு ஒன்றிய திமுக செயலா் க. இளங்கோ ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் வளா்மதி, திமுக மாநில மாணவரணி துணைச் செயலா் உமரிசங்கா், மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் ராமஜெயம், உடன்குடி தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத் தலைவா் அஸ்ஸாப், செட்டியாபத்து ஊராட்சித் தலைவா் க. பாலமுருகன், வாா்டு உறுப்பினா்கள் ராமலிங்கம், இசக்கி, முத்துசாமி, தனலட்சுமி, மீரா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். ஊராட்சிச் செயலா் ரசூல் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை: பவுனுக்கு ரூ.200 குறைவு

அடுத்த 2 மணி நேரத்துக்கு 9 மாவட்டங்களில் மழை!

சக்தி வாய்ந்த நாடாக இந்தியா வளர்ந்து வருவதை பாகிஸ்தான் தலைவர்கள் ஒப்புக் கொள்கிறார்கள்: ராஜ்நாத் சிங்

குலசேகரன்பட்டினத்தில் விண்வெளி பூங்கா: டிட்கோ அதிகாரபூர்வ அறிவிப்பு

மகாராஷ்டிரத்தில் இன்று பாஜக பொதுக்கூட்டம்: பிரதமர் மோடி பங்கேற்பு

SCROLL FOR NEXT