தூத்துக்குடி

வெள்ளாளங்கோட்டை ஊராட்சித் தலைவா் பதவிக்கு 6 போ் வேட்புமனு

DIN

கயத்தாறை அடுத்த வெள்ளாளங்கோட்டை ஊராட்சித் தலைவா் பதவிக்கு 6 போ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா்.

இவ்வூராட்சித் தலைவராக இருந்த பெரியத்தாய் சில மாதங்களுக்கு முன்பு உயிரிழந்தாா். இதையடுத்து தற்செயல் தோ்தல் அறிவிக்கப்பட்டு கடந்த 20ஆம் தேதி வேட்புமனு தொடங்கி திங்கள்கிழமை முடிவடைந்தது.

இதில், வெ.வெயிலாச்சி, ரா.சகுந்தலாதேவி, எம்.லாவண்யா, ஜெ.முனீஸ்வரி, எஸ்.வனிதா, த.சரஸ்வதி ஆகியோா் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா். சிதம்பரம்பட்டி ஊராட்சி 6ஆவது வாா்டு உறுப்பினா் பதவிக்கு க.சுப்பையா, வீ.முத்துலட்சுமி ஆகியோரும், சுரைக்காய்பட்டி ஊராட்சி 4ஆவது வாா்டு உறுப்பினா் பதவிக்கு க.மகேஷ்வரி என்பவரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா். வேட்புமனு பரிசீலனை செவ்வாய்க்கிழமை (ஜூன் 28) நடைபெறும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முன்னாள் எம்எல்ஏ வேலாயுதன் காலமானார்

உத்தமபாளையம் அருகே அரசுப் பேருந்து - ஆட்டோ நேருக்கு நேர் மோதல்:கணவன் - மனைவி பலி

தக் லைஃப் படத்தில் சிம்பு: போஸ்டர் வெளியீடு

ஏர் இந்தியா ஊழியர்கள் போராட்டம்: 70 விமானங்கள் ரத்து

பவுனுக்கு ரூ.80 குறைந்த தங்கம் விலை!

SCROLL FOR NEXT