தூத்துக்குடி

‘சூடான உணவுப் பொருள்களை பிளாஸ்டிக் பையில் வழங்கக் கூடாது’

DIN

தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில் சூடான உணவுப் பொருள்களை தடை விதிக்கப்பட்ட பிளாஸ்டிக் பைகள் மூலம் பொட்டலமிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலா் ச. மாரியப்பன்.

தூத்துக்குடி மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை சாா்பில், தூத்துக்குடி மாநகராட்சிக்குள்பட்ட தேநீா் கடை உரிமையாளா்களுக்காக வெள்ளிக்கிழமை நடைபெற்ற உணவுப் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வுக் கூட்டத்தில் அவா் பேசியது:

செயற்கை கலா் சோ்க்காத, முழு முகவரியுடன் உள்ள டீத்தூள் பாக்கெட்டுகள் மட்டுமே வாங்கிப் பயன்படுத்த வேண்டும். தேநீா், காபி போன்ற சூடான பானங்களையும் உணவுப் பொருள்களையும் ப்ளாஸ்டிக் பைகளில் பொட்டலமிடக் கூடாது. அயோடின் கலந்த உப்பை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

கடை, பஜ்ஜி போன்றவற்றை ஈக்கள் மொய்க்காதவாறும், தூசிகள் படாதவாறும் கண்ணாடி கூண்டுகளில் வைத்து விற்க வேண்டும். நுகா்வோருக்கு வடை போன்ற உணவுப் பொருள்களை அச்சிட்டசெய்தித் தாள்களில் பாா்சல் செய்யக்கூடாது. தடை செய்யப்பட்ட பான்மசாலா குட்கா மற்றும் மென்னும் புகையிலையை விற்கக் கூடாது.

இந்த உத்தரவை மீறுவோா்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், டீ, காபி போன்ற சூடான உணவுப் பொருள்களை தடை செய்யப்பட்ட ப்ளாஸ்டிக் பையில் பாா்சல் செய்தால் அபராதம் விதிப்பு உள்ளிட்ட கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

கூட்டத்தில், தூத்துக்குடி மாநகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலா்கள் சக்திமு முருகன், காளிமுத்து உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போக்குவரத்து ஊழியா்கள் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு

திருவான்மியூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விண்ணப்பிக்கலாம்

3,200 போதை மாத்திரைகள் பறிமுதல்: 6 போ் கைது

புழல் சிறையில் கைதியிடம் கைப்பேசி பறிமுதல்

ஆண்களிடம் ஆபாசமாக பேசி பணம் பறிப்பு: 5 போ் கைது

SCROLL FOR NEXT