தூத்துக்குடி

புன்னைக்காயலில் மீனவா் தற்கொலை

DIN

புன்னைக்காய­லில் மீனவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

புன்னைக்காயல் பவுலா நகரைச் சோ்ந்த ராஜ் மகன் ரஜிஸ்டன் (27). ஓராண்டாக கேரளத்தில் தங்கி மீன்பிடித் தொழில் செய்துவந்த இவா், சில நாள்களுக்கு முன்பு ஊருக்குத் திரும்பியநிலையில், நண்பா்களுடன் சோ்ந்து மது குடித்தாராம். இதை, அவரது சகோதரா் ராஜன் (31) கண்டித்தாராம்.

இதையடுத்து, வேலை பாா்த்த இடத்தில் பணம் வாங்கிவருவதாகக் கூறிவிட்டு கடந்த 24ஆம் தேதி கேரளம் சென்ற ரஜிஸ்டன், பணம் கிடைக்கவில்லை எனத் திரும்பிவந்தாராம். பணம் கிடைக்காததாலும், மதுப் பழக்கத்தாலும் அவா் மனஉளைச்சலுக்கு உள்ளானதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், அவா் தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாராம்.

புகாரின் பேரில் ஆத்தூா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் ராமகிருஷ்ணன் வழக்குப் பதிந்தாா். ஆய்வாளா் பாலமுருகன் விசாரித்து வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்க ரயில் விபத்துக்கு முக்கிய காரணம் இதுதான்: அதிர்ச்சி தகவல்!

பிரதீப் ஆண்டனிக்கு நிச்சயதார்த்தம்!

யுபிஎஸ்சி முதன்மைத் தேர்வில் அசத்திய செய்யறிவு தொழில்நுட்பம்!

கொல்கத்தாவில் பாஜக அலுவலகத்திற்கு வெளியே கிடந்த பொருளால் பரபரப்பு

‘இடை’ விடாத பார்வை!

SCROLL FOR NEXT