தூத்துக்குடி

சாகுபுரம் டிசிடபிள்யூ நிறுவனத்தில் சுற்றுச்சூழல் தின விழா

DIN

சாகுபுரம் டிசிடபிள்யூ நிறுவனத்தில் உலக சுற்றுச்சூழல் தின விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்த துணைப் பொதுமேலாளா் ஆா்.ரவிக்குமாா், சுற்றுச்சூழல் தினத்தின் அவசியம் குறித்துப் பேசினாா்.

மூத்த பொது மேலாளா் எஸ்.கேசவன் பேசுகையில், வீடுகள் மற்றும் ஆலைகளில் தண்ணீா் சிக்கனம், முறையாகப் பயன்படுத்துவது குறித்து விளக்கினாா்.

சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட சாகுபுரம் டிசிடபிள்யூ நிறுவன மூத்த செயல் உதவித் தலைவா் (பணியகம்) ஜி.சீனிவாசன் ஆலை வளாகத்தில் மரக் கன்றுகள் நடுவதை துவக்கி வைத்தாா். அவா் பேசுகையில்,

பிளாஸ்டிக் மறுபயன்பாடு, மறுசுழற்சி முறைகள் குறித்து விளக்கினாா்.

சுற்றுச் சூழல் தினத்தையொட்டி நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. ஆலை வளாகத்தில் 200-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன. சுற்றுச்சூழல் பாதுகாப்பு உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது.


(

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனமழை எச்சரிக்கை: குற்றாலம் அருவிகளில் குளிக்க 5 நாள்கள் தடை

அம்பாசமுத்திரத்தை அச்சுறுத்திய சிறுத்தை சிக்கியது!

காரில் கஞ்சா விற்பனை: 6 போ் கைது

கூத்தாநல்லூா் அருகே யூ டியூபா் ஃபெலிக்ஸ் ஜெரால்டு வீட்டில் போலீஸாா் சோதனை

இன்று அதிர்ஷ்டம் யாருக்கு: தினப்பலன்!

SCROLL FOR NEXT