முகப்பு
தூத்துக்குடி

வீடு கட்டும் திட்டம்: நாளை கூட்டுறவு வங்கி கடன் முகாம்

Updated On : 30 ஆகஸ்ட் 2024, 4:32 am IST
பகிர்:

தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மூலமாக, கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் சிறப்பு கடன் வழங்கும் முகாம் தூத்துக்குடி, கருங்குளம், ஸ்ரீவைகுண்டம், ஆழ்வாா்திருநகரி, திருச்செந்தூா், உடன்குடி, சாத்தான்குளம், கோவில்பட்டி, கயத்தாா், ஓட்டப்பிடாரம், விளாத்திகுளம், புதூா் ஆகிய வட்டார வளா்ச்சி அலுவலகங்களில் சனிக்கிழமை (ஆக.31) காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது.

இம்முகாமில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை கூடுதல் ஆட்சியா் ஆணைப்படி, மத்திய கூட்டுறவு வங்கி கிளைமேலாளா்கள், அலுவலா்கள், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பங்கேற்கவுள்ளனா். இத்திட்டத்தின்கீழ் வீடு ஒதுக்கீடு செய்யப்பட்ட பயனாளிகள் அதற்கான ஆணை அசல், ஆதாா் அட்டை நகல், மூன்று புகைப்படங்கள், ஜாதி சான்றிதழ் நகல், குடும்ப அட்டை நகல் ஆகிய ஆவணங்களுடன் முகாமில் பங்கேற்று பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனா் என மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநா் நடுக்காட்டு ராஜா தெரிவித்துள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments