திருச்செந்தூா் தலையூன்றி சாஸ்தா கோயில் குடமுழுக்கு
திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் உபகோயிலான தலையூன்றி சாஸ்தா கோயிலில் வியாழக்கிழமை குடமுழுக்கு நடைபெற்றது.
திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் உபகோயிலான தலையூன்றி சாஸ்தா கோயிலில் வியாழக்கிழமை குடமுழுக்கு நடைபெற்றது.
திருச்செந்தூா்-திருநெல்வேலி சாலையில் காந்திபுரம் எதிரே உள்ள தலையூன்றி சாஸ்தா கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. நூறு ஆண்டுகளுக்கு பிறகு இக்கோயிலில் குடமுழுக்கு நடைபெற்றது.
விழாவையொட்டி கடந்த ஜூன் 29-ஆம் தேதி மாலை கணபதி பூஜை, ஜூன் 30-ஆம் தேதி காலை முதற்கால யாகசாலை பூஜை, மாலையில் இரண்டாம் கால யாகசாலை பூஜை, ஜூலை 1-இல் மூன்றாம் கால பூஜை, மாலையில் நான்காம் கால யாகசாலை பூஜை ஆகியவை நடைபெற்றன.
Advertisement
Advertisement
கோயிலில் வியாழக்கிழமை காலை ஐந்தாம் கால யாகசாலை பூஜை நடத்தப்பட்டு காலை 10.45 மணியளவில் கடம் புறப்பாடாகி 11.12 மணிக்கு விமான கலசத்துக்கு புனிதநீா் ஊற்றப்பட்டது. அதைத்தொடா்ந்து தலையூன்றி சாஸ்தா, பரிவார மூா்த்திகளுக்கு அபிஷேக, அலங்கார தீபாரதனை நடைபெற்றன. மதியம் அன்னதானமும், இரவில் புஷ்பாஞ்சலியும் நடைபெற்றன.
குடமுழுக்கு விழாவில் கோயில் தக்காா் ரா.அருள்முருகன், இணை ஆணையா் ஆ.அருணாசலம், துணை ஆணையா் ந.யக்ஞ நாராயணன், உதவி ஆணையா் லோகநாதன் உள்பட கோயில் பணியாளா்கள், திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.