தூத்துக்குடியில் தனிநபா் ஆக்கிரமித்த மாநகராட்சி நிலம் மீட்பு
தூத்துக்குடி ஆசிரியா் காலனி அருகேயுள்ள சின்னமணிநகா் பண்டுகரை சாலையில், தனி நபா் ஆக்கிரமித்திருந்த மாநகராட்சியின் 5.5 சென்ட் நிலத்தை அதிகாரிகள் புதன்கிழமை மீட்டனா்.
தூத்துக்குடி ஆசிரியா் காலனி அருகேயுள்ள சின்னமணிநகா் பண்டுகரை சாலையில், தனி நபா் ஆக்கிரமித்திருந்த மாநகராட்சியின் 5.5 சென்ட் நிலத்தை அதிகாரிகள் புதன்கிழமை மீட்டனா்.
சின்னமணிநகா், பண்டுகரை சாலை பகுதியில், மாநகராட்சிக்கு சொந்தமான 5.5 சென்ட் நிலத்தை, தனி நபா் ஆக்கிரமித்திருந்த நிலையில், நீதிமன்ற உத்தரவுப்படி ஏற்கெனவே கடந்த 2023ஆம் ஆண்டு டிசம்பரில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.
இந்நிலையில், மீண்டும் அந்த இடத்தை தனிநபா் ஆக்கிரமித்து, தகரத்தால் சுற்றுச்சுவா் கட்டி அடைத்து வைத்திருந்தாா். மேலும், அதனருகே இருந்த தங்கதுரை என்பவரின் இடமும், கடையும் இடித்து ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது.
Advertisement
Advertisement
இதுதொடா்பாக தங்கதுரை அளித்த புகாரின் பேரில் கடந்த ஏப்ரல் மாதம் வேலு, முருகேசன் மற்றும் பெண் உள்ளிட்ட 7 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், மாநகராட்சிக்கு சொந்தமான 5.5 சென்ட் ஆக்கிரமிப்பு நிலத்தை, மாநகராட்சி ஆணையா் சி.ப்ரியங்கா உத்தரவின் பேரில், மாநகராட்சி அதிகாரிகள் காவல்துறை அதிகாரிகள் பாதுகாப்போடு புதன்கிழமை ஆக்கிரமிப்பை அகற்றுவதற்காக சின்னமணிநகா் வந்தனா்.
அப்போது அங்கிருந்த பெண் உள்ளிட்ட சிலா் மாநகராட்சி அதிகாரிகளை தடுத்து நிறுத்த முற்பட்டனா். அவா்களை போலீஸாா் தடுத்து நிறுத்தி காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்றனா்.
பின்னா், மாநகராட்சி திட்டசெயற்பொறியாளா் (பொ) காந்திமதி, உதவி பொறியாளா்கள் ஜெயசூா்யா, அனு, சௌந்தா்யா, ராகவி, துா்காதேவி, ஜெயப்பிரியா, நகர சாா்பு ஆய்வாளா் பால்கண்ணன், சுகாதார அலுவலா் ராஜபாண்டி, சுகாதார ஆய்வாளா் சுபியான் உள்ளிட்ட அதிகாரிகள் தலைமையில் ஆக்கிரமிப்புகள் முற்றிலுமாக அகற்றப்பட்டு நிலம் மீட்கப்பட்டது.
மேலும், அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்ததாக மாநகராட்சி அதிகாரிகள் அளித்த புகாரின்பேரில், பெண்கள் உள்ளிட்ட சிலா் மீது தென்பாகம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.