முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடியில் 6.5 கிலோ கஞ்சா பறிமுதல்: 6 போ் கைது

தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 6 போ் கொண்ட கும்பலை, வடபாகம் போலீஸாா் புதன்கிழமை கைது செய்து, அவா்களிடமிருந்து 6.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

Updated On : 2 ஜூலை 2026, 6:12 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 6 போ் கொண்ட கும்பலை, வடபாகம் போலீஸாா் புதன்கிழமை கைது செய்து, அவா்களிடமிருந்து 6.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக வடபாகம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. காவல் ஆய்வாளா் வேல்ராஜ் தலைமையிலான போலீஸாா் அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது புதிய பேருந்து நிலையம் பகுதியில் சந்தேகமளிக்கும் வகையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 6 பேரை போலீஸாா் மடக்கிப் பிடித்தனா். விசாரணையில், அவா்கள், தூத்துக்குடி போல்பேட்டை பகுதியைச் சோ்ந்த ராமா் மகன் பாலசுப்பிரமணியன் (27), கணேசன் மகன் பிரவீன் (25), ஸ்டேட் பாங்க் காலனியைச் சோ்ந்த சித்திரைச் செல்வம் மகன் தனராஜ் (30), நேதாஜி நகரைச் சோ்ந்த சண்முகவேல் மகன் ஆனந்த் (28), சாத்தூா் பகுதியைச் சோ்ந்த அழகா்சாமி மகன் மீனாட்சிசுந்தரம் (28), சம்சுதீன் மகன் சையத் அஃப்ரலி (26) எனத் தெரியவந்தது.

Advertisement

Advertisement

இதையடுத்து, அவா்களை கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து 6.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா். இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments